India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் ராகுல் காந்திக்கு 5வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்., செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், சிறிய மனப்பான்மை கொண்டவர்களிடம் இருந்து பெருந்தன்மையை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என விமர்சித்தார். மேலும், ராகுல் 50வது வரிசையில் அமர்ந்தாலும் மக்களின் தலைவராகவே இருப்பார் என்றார்.
இந்த வாரம் 3 வெப் தொடர்கள் மற்றும் ஒரு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்’ வெப் தொடர் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும், ‘வேற மாறி ஆபீஸ்’ 2 வெப் தொடர் ஆஹா தளத்திலும், மம்முட்டி, மோகன்லால் நடித்துள்ள மனோரதங்கள் ஆந்தாலஜி ஜீ5 தளத்திலும், கீர்த்தி பாண்டியன் நடித்த ‘கொஞ்சி பேசினால் என்ன’ திரைப்படம் நாளை (ஆக.16) ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.
இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் விருதுநகர், தி.மலை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இந்த மாவட்டங்களில் இரவில் வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சச்சினின் சாதனையை இங்கி., வீரர் ஜோ ரூட் முறியடிப்பார் என ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். சச்சின் 15,921 ரன்களுடன் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நிலையில், ரூட் 12,027 ரன்களுடன் 7வது இடத்தில் உள்ளார். பாண்டிங் (13,378), காலிஸ் (13,289), டிராவிட் (13,288), குக் (12,472), சங்ககரா (12,400) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன்காரணமாக, பல தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு போன் செய்து, விடுமுறையை உறுதி செய்துக் கொள்ளவும். ஆனால், அரசு பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். இதில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.
இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்பப்பிரிவில் காலியாக உள்ள SSC EXECUTIVE பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.16) கடைசி நாளாகும். இதற்கு MSC, BE, B.TECH, M.TECH, MCA படித்த 19 -24 வயதுடையவர்கள் <
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள BJP மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வரும் தனது தந்தைக்கு இந்த விருதை வழங்கி கெளரவித்திருப்பது மகளாக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
விண்வெளி விஞ்ஞானியும், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவரான ராம் நரேன் அகர்வால் காலமானார். அக்னி வரிசை ஏவுகணை வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர். 1983இல் தொடங்கப்பட்ட அக்னி திட்டத்தை வழிநடத்தியதால், அவரை “அக்னி மேன்” என பலரும் அழைத்தனர். சுதந்திர தினமான இன்று, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அவரது மறைவு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் இந்த திருவிழா 4 நாள்கள் நடைபெறவுள்ளது. தாய்லாந்து, வியட்நாம் உள்பட பல நாடுகளில் இருந்து ராட்சத காற்றாடியை பறக்க விட பலர் வருகை தந்துள்ளனர். கடந்தாண்டு 150 காற்றாடிகள் பறக்கவிட்ட நிலையில், இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. இதனால், திமுக சார்பில் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பு இல்லை என அறிவிப்பும் வெளியானது. ஆனால், தற்போது பழைய பிரச்னைகளை எல்லாம் மறந்து, சிரித்த முகத்துடன் ரவியும், ஸ்டாலினும் கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர்.
Sorry, no posts matched your criteria.