news

News August 16, 2024

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மகன் போட்டி!

image

நடப்பாண்டு நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு அங்கு நடந்த உள்நாட்டு கலவரத்துக்கு பயந்து ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.

News August 16, 2024

ஆக.20ல் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்படுகிறது

image

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி ஆக.20 ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் ஆக.17 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விதிகளின்படியே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

News August 15, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (16.08.2024)

image

*மேஷம் – மகிழ்ச்சி உண்டாகும்
*ரிஷபம் – பெருமை தேடி வரும்
*மிதுனம் – அன்பு கிடைக்கும்
*கடகம் – வெற்றி கிடைக்கும்
*சிம்மம் – போட்டியை தவிர்க்கவும்
*கன்னி – உடல் அசதியாக இருக்கும்
*துலாம் – சாந்தமாக இருங்கள்
*விருச்சிகம் – முயற்சியை கைவிட வேண்டாம்
*தனுசு – ஓய்வு தேவை, *மகரம் – பாராட்டு வரும் *கும்பம் – ஜாக்பாட் அடிக்கும் *மீனம் – பாசம் கிடைக்கும்

News August 15, 2024

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?

image

நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகவில்லை என்றால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். செரிமானப் பிரச்னைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது சிறந்தது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ச்சியான உடல் வீக்கம், நெஞ்செரிச்சல், நாள்பட்ட மலச்சிக்கல், தொடர் வயிற்று வலி, திடீரென உடல் எடை குறைதல், அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல் போன்றவை செரிமானப் பிரச்னைக்கான அறிகுறிகளாகும்.

News August 15, 2024

என்றோ சினிமாவை விட்டு போயிருப்பேன்: SK

image

வீடு வாங்கலாம் என சொல்லாமல், திரைப்படம் தயாரிக்கலாம் என தனது மனைவி கூறுவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தனியார் டிவியின் விருது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘கொட்டுக்காளி’ போன்ற படங்களை தயாரிப்பது தனக்கு மன திருப்தி தருவதாகக் கூறினார். தான் என்றோ சினிமாவை விட்டு போயிருப்பேன் எனக் கூறிய SK, தான் சினிமாவில் நீடிக்க மனைவிதான் காரணம் என்றார்.

News August 15, 2024

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: மம்தா பானர்ஜி

image

மே.வங்க பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மம்தா வலியுறுத்தியுள்ளார். நீதிக்காக போராடும் சக மாணவர்களை தான் குறை சொல்ல விரும்பவில்லை என்ற அவர், இந்த வழக்கில் தங்களுக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தையும் சிபிஐயிடம் கொடுத்துள்ளோம் என்றார். குற்றவாளிகளை தூக்கிலிட்டால் தான் மற்றவர்கள் அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.

News August 15, 2024

வினேஷ் போகத்தின் முதல் Reaction..!

image

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின், வினேஷ் போகத் முதல்முறையாக பதிவிட்ட இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த விளையாட்டுக்கான நீதிமன்றம், நீண்ட இழுபறிக்கு பின் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், களத்தில் படுத்தபடி கதறி அழுத புகைப்படத்தை பகிர்ந்து, தனது வேதனையை வெளிபடுத்தியுள்ளார். You are champion என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News August 15, 2024

விஜய் கடைசி படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

நடிகர் விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் அரசியலில் குதித்துள்ளதால், அடுத்த படம் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார். இதனால், அப்படத்தை இயக்கப்போவது யார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், இந்த தகவலை எச்.வினோத் உறுதி செய்துள்ளார். மேலும், இது அரசியல் படமில்லை, கமர்ஷியல் படம் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 15, 2024

இதை செய்தால், ₹1,125க்கு பதில் ₹206 மின் கட்டணம்

image

தற்போது 400 யூனிட்டுக்கு மின்வாரியத்துக்கு ₹1,125 கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் வீடுகளில் சூரிய <<13688916>>மின்தகடு <<>>பொருத்திய பின்னர் நீங்கள் ₹206 செலுத்தினால் போதும். இதன் மூலம் ₹919 பணத்தை நீங்கள் சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் சேர www.pmsuryaghar.gov.in, www.solorrooftop.gov.inஇல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9445854568, 9445854477, 9445854481 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

News August 15, 2024

தடுமாறி வரும் தென்னாப்பிரிக்கா அணி

image

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மார்க்ரம் 14, டோனி 1, ஸ்டப்ஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் தெம்பா பவுமா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சற்றுமுன்பு வரை தெ.ஆ., 26 ஓவர்கள் முடிவில் 64/4 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

error: Content is protected !!