India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக அவசர செயற்குழுக்கூட்டம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.16) காலை நடைபெற உள்ளது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்களை இயற்ற ADMK திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ADMK வில் அமைப்பு ரீதியில் சில மாற்றங்களை செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது
தனக்கும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிட ஆர்வம் இல்லை என்று கூறிய அவர், கட்சி விருப்பப்பட்டால் தனது மகன் ஜெய் பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறினார். பாராமதி தொகுதி எம்எல்ஏவாக அஜித் பவார் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. 123 சாதா இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் கப்பலில் உள்ளது. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டியுடன் ₹7500, சாதா இருக்கைக்கு ₹5000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
அலோபதி மருந்தை சாப்பிட்டு கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அலோபதி மருத்துவம் குறித்து தவறான பரப்புரை செய்ததால் சர்ச்சையில் சிக்கி உச்ச நீதிமன்றத்திடம் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் முடிந்தது வைத்தது. இந்நிலையில், மீண்டும் அலோபதி மருத்துவத்தை பற்றி அவர் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
▶ஆகஸ்ட் – 16 ▶ஆடி – 31
▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 12:15 AM – 01:15 AM & 04:45 – 05:45
▶கெளரி நேரம்: 01:15 AM – 02:15 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
▶குளிகை: 07:30 AM – 09:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
▶நட்சத்திரம் : மூலம் ▶ சந்திராஷ்டமம்: ரோகிணி
ஆர்.என் ரவி திராவிடத்தை பற்றி பேச தகுதி இல்லாதவர் என எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆர்.என்.ரவி ஆளுநராக நீடித்திருப்பது தமிழ்நாட்டுக்கும், இந்திய அரசியல் சாசனத்துக்கும் நல்லதல்ல என விமர்சித்த அவர், தமிழர்களின் பன்முகத்தன்மையை எதிர்த்து கேள்வி கேட்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, திராவிடம் மக்களை பிளவுப்படுத்தியதாக ஆர்.என.ரவி கூறியிருந்தார்.
மே.வங்க பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராக 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆக.9 ஆம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை அம்மாநில உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், பெண் மருத்துவர் மரணம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், அவரின் பெற்றோரிடம் வாக்கு மூலம் பெற்றனர்.
தென்னாப்பிரிக்கா எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 97/7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். SA அணியின் வியன் முல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் SA அணி 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பெடிங்காம் 28, டி பீட் 38 ரன்கள் எடுத்தனர்.
பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9:17 மணிக்கு இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 475 கி.மீ தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளதாகவும், இதன் பணிக்காலம் ஓராண்டாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சன்னபட்னா இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது கனகபுரா தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அவர், இடைத்தேர்தலில் வென்று கனகபுரா தொகுதியை தனது சகோதரருக்கு விட்டு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சராக உள்ள குமாரசாமி, சன்னபட்னா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.