India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ₹80 உயர்ந்து ₹52,520க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,565க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ₹89க்கும், கிலோ வெள்ளி ₹500 உயர்ந்து ₹89,000க்கும் விற்பனையாகிறது. ஒருவாரமாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 14ஆம் தேதி குறைந்தது. ஆனால், ஒரு நாளில் மீண்டும் அதிகரித்துள்ளது.
2026 ஹாக்கி உலகக்கோப்பையில் பதக்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு என இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். அதற்காக தனது உடலை ஃபிட்டாக பராமரிப்பதாகவும், அனைத்தும் சாதகமாக நடந்தால் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு அறிவித்த நிலையில், இவரும் ஓய்வு அறிவிக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதயமே இல்லாமல், தமிழ்நாட்டுக்கான ரயில் திட்டங்களுக்கு ₹1000 மத்திய அரசு பிச்சையாக போடுவதாக திமுக MP டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். குமரி – காஷ்மீர் வரை மக்களை இணைப்பது இருப்புப் பாதைகள்தான். ஆனால், பீகார், ஆந்திராவிற்கு மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியவர்கள், தமிழ்நாட்டை வஞ்சிப்பதால், ஏழை, எளிய மக்களின் ரதமான ரயில் போக்குவரத்து எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது என்றார்.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா சட்ட மன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை EC இன்று வெளியிடவுள்ளது. இதற்கான அறிவிப்பை EC தலைமை ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று மதியம் 3 மணிக்கு வெளியிடவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப். 30க்குள் தேர்தல் நடத்த SC கெடு விதித்திருப்பதால், அதுகுறித்த அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து SSLV-D3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 175.5 கிலோ எடை கொண்ட EOS-08 செயற்கைக்கோளையும், SR-0 டெமோசாட் என்ற தனியார் நிறுவன செயற்கைக்கோளையும் SSLV-D3 ராக்கெட் எடுத்துச் சென்றது. EOS-08 செயற்கைக்கோள் பேரிடர் காலங்களில் பூமி கண்காணிப்பு பணிகளையும், காலநிலை கண்காணிப்பு, மலைப் பகுதிகளில் மழை அளவு உள்ளிட்ட தரவுகளையும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி, இன்று, நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், தி.மலை, நாகை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க, www.tnstc.in மற்றும் அதன் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள SSC EXECUTIVE பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு BE, B.TECH, BSC, MSC, BCA, MCA, M.TECH படித்த 19 -24 வயதுடையவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : பணி நிலையைப் பொறுத்து ரூ.56,100 முதல் ரூ.1,77, 500 வரை வழங்கப்படும். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.
டிஎஸ்பிக்கள் 33 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், 33 டிஎஸ்பிக்களை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து, கோவை பொது விநியோக கடத்தல் தடுப்பு டிஎஸ்பி ஜனனி உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.
நன்கு செட்டிலாகிய அணிகள் மெகா ஏலத்தை விரும்பவில்லை எனவும், செட்டிலாகாத அணிகள் ஏலத்தை விரும்புவதாகவும் BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அதேபோல் இம்பேக்ட் பிளேயர் விதியில் சில சாதகங்கள், பாதகங்கள் உள்ளதாகவும், அணி நிர்வாகங்களுடனான சமீபத்திய சந்திப்பில் இது தொடர்பாக விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மெகா ஏலம் குறித்த இறுதி முடிவு விரைவில் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மையால் உலகளாவிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கோ, மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை விமான நிலையத்தில் சோதனை செய்ய மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. தோல் அரிப்பு, 2 -4 வாரம் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சீழ் நிறைந்த புண்கள் குரங்கு அம்மை அறிகுறி. இது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது.
Sorry, no posts matched your criteria.