news

News August 17, 2024

குருவின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்?

image

குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால், அந்த நிறத்தில் ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு குரு பகவானை அலங்கரிக்க வேண்டும் என்றும், கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் எனவும் கூறுகிறார்கள்.

News August 17, 2024

இறுதி கட்டத்தில் தூர்வாறும் பணிகள்: கே.என்.நேரு

image

சென்னையில் 320 கிமீ அளவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுவரை 77% மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த 45 நாள்களுக்குள் சென்னையில் உள்ள அனைத்து வடிகால்களும் தூர்வாறப்பட்டிருக்கும் என்றார். சென்னையில் 20% மழை பெய்தாலும், உடனடியாக தண்ணீர் வெளியேறும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News August 17, 2024

தோனி, கோலியை விமர்சித்த அமித் மிஸ்ரா

image

இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு தோனி மற்றும் கோலிதான் காரணம் என அமித் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார். அணியில் தொடர்ந்து விளையாட முடியாததற்கு, அணியின் காம்பினேஷனுக்கு தான் செட் ஆகவில்லை என்று தோனி தன்னிடம் கூறியதாக தெரிவித்த அவர், தோனியை எதிர்த்து அப்போது தன்னால் எதுவும் பேச முடியவில்லை என்றார். கோலியும் தனக்கு சரியான வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறினார்.

News August 17, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 17 ▶ஆவணி – 01
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 – 05:45
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 09:30 PM – 10:30PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM
▶எமகண்டம்: 01:30 PM – 03:30 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶திதி: சூன்ய ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
▶நட்சத்திரம் : பூராடம் ▶ சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்

News August 17, 2024

ராகுலை ஏன் அழைக்கவில்லை? ஜெயக்குமார்

image

பாஜக-திமுக இடையே கள்ள உறவு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் விருந்தில் முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்றது ஏன் என சந்தேகம் எழுப்பிய அவர், ராஜ்நாத் சிங்கை கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு அழைக்க முடிந்த திமுகவால், ராகுலை ஏன் கூப்பிடவில்லை என வினவினார்.

News August 17, 2024

துணை முதல்வராக உதயநிதி வந்தால் மகிழ்ச்சி: மஸ்தான்

image

வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்பவர்கள் தமிழக அரசிடம் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். போலியான ஏஜென்ட் மூலம் செல்பவர்கள் வெளிநாடுகளில் கஷ்டப்படுவதாக தெரிவித்த அவர், பாதிக்கப்படுபவர்களை அங்கிருந்து மீட்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். உதயநிதி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், துணை முதல்வராக உதயநிதி வந்தால் மகிழ்ச்சி என்றார்.

News August 17, 2024

அம்மா மருந்தகங்களை மூட திமுக முயற்சி: தினகரன்

image

அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பது திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலனுக்காக தமிழக அரசு எந்தவித திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News August 17, 2024

முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு உத்தவ் தாக்கரே முற்றுப்புள்ளி

image

காங்கிரஸ், என்சிபி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை ஆதரிப்போம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அதிக இடங்களில் வெல்லும் கட்சிக்கு முதல்வர் பதவி என்பதில் உடன்பாடு இல்லை என்ற அவர், பாஜக வீழ்த்த வேண்டும் என்பதை ஒற்றை நோக்கமாக கொண்டு ‘மகா விகாஷ் அகாதி’ கூட்டணி செயல்படுகிறது என்றார். கடந்த வாரம் சோனியாவை சந்தித்த உத்தவ், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

News August 17, 2024

தேசிய விருது மகிழ்ச்சியை தருகிறது: நித்யா மேனன்

image

முதல் முறையாக தேசிய விருது பெற்றதால், தான் மிகவும் மகிழ்ச்சியாக நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். தேசிய விருது பெற ஆச்சரியமான படங்களை செய்ய வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு சிம்பிளான படத்துக்கு, உண்மையான விருது கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனுஷ், நித்யா மேனன் கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

ஆகஸ்ட் 17: வரலாற்றில் இன்று

image

▶1947 – இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
▶1970 – இயக்குநர் ஷங்கர் பிறந்த தினம்
▶1993 – பிரபல நடிகை நிதி அகர்வால் பிறந்த தினம்
▶1999 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000 பேர் உயிரிழந்தனர்.
▶1999 – நடிகை கௌரி ஜி கிஷன் பிறந்த தினம்
▶2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக்ஸில் 8 தங்கப்பதக்கத்தை வென்றார்.

error: Content is protected !!