India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆணாதிக்க முறைக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது இன்ஸ்டா பதிவில், “இந்த நேரத்தில் நீங்கள் என்ன காரணத்தைக் கூறப் போகிறீர்கள்? அவள் மேல் தான் தவறுள்ளது என்பீர்களா? Men Will Be Men அப்படித் தானே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் நாள்தோறும் துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கல்வி & வேலை செய்யும் நிறுவனங்கள் என அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பயம் காரணமாக குடும்பத்தினரிடம் கூட வெளிப்படுத்துவதில்லை. உங்களது பெண் பிள்ளைகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்களா? என ஒவ்வொரு பெற்றோரும் கேளுங்கள். தயக்கமின்றி அவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குங்கள். >SHARE
நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதிகேட்டு, இன்று காலை 6 முதல் நாளை காலை 6 வரை மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என IMA கூறியுள்ளது. அவசர கால சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நோயாளிகளுக்கு பாதிப்பின்றி மருத்துவர்கள் போராடுமாறு தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் 4 மாதமாக காலியாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்த அவர், எப்போது ஓய்வு பெறப்போகிறார்கள் என முன்கூட்டியே தெரிந்தும், காலி பணியிடங்கள் ஏற்படுவதை ஏற்க முடியாது எனவும் சாடியுள்ளார்.
3 தென் மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் (RMC) ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என RMC கூறியுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், கோவை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவையில் நாளையும் கனமழை பெய்யும் என்றும் RMC தெரிவித்துள்ளது.
அண்ணாமலையின் அன்பு, அதரவு அதிமுகவுக்கு தேவையில்லை என விந்தியா தெரிவித்துள்ளார். அண்ணாமலை அதிமுகவை ஞாபகம் வைத்துக்கொண்டாலும், அதனால் அதிமுக கூட்டணியில் மாற்றம் வரப்போவதில்லை என்று கிண்டல் செய்த அவர், அதிமுகவின் பெருமையை மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அண்ணாமலைக்கு தெரிந்திருக்கும் என்றார். முன்னதாக, ஓராண்டாக அதிமுகவை மறந்து விட்டோம் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்திய அரசியலமைப்பு தின விழா, பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழாவையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டிகளை ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். 6-12ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கம், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை செப்.15க்குள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். வெற்றியாளர்களுக்கு 2025 குடியரசு தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கு மொத்தம் 2006 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆக.17) கடைசி நாளாகும். வயது: கிரேடு ‘சி’-க்கு 18-30, கிரேடு ‘டி’ 18-27 இருக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி. இணையதளம்: https://ssc.gov.in
விளவங்கோடு இடைத்தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளை வாங்காத அதிமுக ஆட்சியை பிடிப்போம் என்பது அரசியல் காமெடி என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். 11 தேர்தலாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுக, எப்படி ஆட்சியை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர், எம்.பி தேர்தலில் 11 தொகுதிகளில் அதிமுக 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறினார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பட்டியலினத்தவர் முதல்வர் பதவிக்கு வர மாயாஜாலங்கள் செய்ய தேவையில்லை, விழிப்புணர்வு மட்டும் போதும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவர் முதல்வராக அந்த சமூக மக்களிடம் இருந்தே ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், வன்னியரும், பட்டியலினத்தவரும் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்றலாம் என்றார். முன்னதாக, தலித் ஒருவர் முதல்வராக வர முடியாது என திருமாவளவன் கூறியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.