news

News August 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

கடனை செலுத்தாததால் மகன் கடத்தல்

image

ஆந்திராவில் கடன் தொகையை செலுத்தாததால் சம்பந்தபட்டவரின் மகனை, தனியார் நிதி நிறுவன முகவர்கள் கடத்திச் சென்றனர். ₹60,000 திரும்ப கொடுத்தால் தான் மகனை மீட்க முடியும் எனவும், குடும்பத்தில் இருந்த பெண்ணிடம் அத்துமீறியதாகவும் கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் ராஜேஷ்வரி புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிறுவனத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என மேலாளர் ராமாராவ் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News August 2, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் முதல் பதக்கத்தை (வெண்கலம்) வென்று சாதனை படைத்துள்ளார். ➤வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ₹50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். ➤அரசு விரைவு போக்குவரத்துக் கழக தினக்கூலி தொழிலாளர்களின் ஊதியத்தை ₹882ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

News August 2, 2024

சென்னை – காட்பாடி இடையே வந்தே மெட்ரோ

image

சென்னை – காட்பாடி இடையிலான வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் ஆக. 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. குறுகிய தொலைவில் அமைந்திருக்கும் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகத்தின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சென்னை – காட்பாடி இடையே விரைவில் இயங்கவுள்ளது. ஏசி வசதியுடனான இந்த ரயில்களில் சுமார் 100 நிமிடங்களில் காட்பாடி சென்றடையலாம்.

News August 1, 2024

Breaking: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து – சீன வீராங்கனை பிங் ஜியாவோ ஹி மோதினர். முதல் செட்டில் சிந்து, 19-21 என்ற கணக்கில் பின் தங்கினார். அடுத்த செட்டில் ஆரம்பம் முதலே பிங் ஜியாவோ ஹி சிறப்பாக விளையாடிய நிலையில், 21-14 என்ற கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். 2-0 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

News August 1, 2024

வெளிநாடு வேலைக்கு புதிய இணையதளம்: தமிழக அரசு

image

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குமுன் தனியார் டொமைனில் இருந்த, www.omcmanpower.com என்ற இணையதளம் தற்போது, தமிழக அரசின் டொமைனுடன் www.omcmanpower.tn.gov.in என்ற புதிய இணையதளமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடு செல்ல விரும்புவோர் புதிய இணையதள முகவரியை பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

News August 1, 2024

ஒலிம்பிக்கில் வெண்கலம்: ஸ்வப்னிலுக்கு ₹1 கோடி பரிசு

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு ₹1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற ஸ்வப்னில் வெண்கலம் வென்றார். இதையடுத்து அவருக்கு ₹1 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது. 50 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரர் ஸ்வப்னில் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 1, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (02.08.2024)

image

*மேஷம் – செலவு அதிகரிக்கும்
*ரிஷபம் – ஆக்கப்பூர்வமான நாள்
*மிதுனம் – அனுகூலம் உண்டாகும்
*கடகம் – முயற்சிக்கேற்ற பலன்
*சிம்மம் – கவலை அதிகரிக்கும்
*கன்னி – யோகம் தேடி வரும்
*துலாம் – ஏமாற்றம் ஏற்படும்
*விருச்சிகம் – மேன்மையான நாள்
*தனுசு – அன்பு அதிகரிக்கும்
*மகரம் – மகிழ்ச்சியான நாள் *கும்பம் – அமைதி உண்டாகும் *மீனம் – போட்டி ஏற்படும்

error: Content is protected !!