news

News August 2, 2024

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வலுவான தரைக்காற்று 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் நாளை முதல் 7ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

News August 2, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤பாரிஸ் ஒலிம்பிக்ஸின் ஆடவர் ஹாக்கியில், பெல்ஜியம் அணியிடம், இந்திய அணி தோல்வியை தழுவியது. ➤தமிழகத்தில் இன்று முதல் ஆக. 7ஆம் தேதி வரை, மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ➤ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக, நடிகர் பிரசாந்துக்கு ₹1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ➤ஆடிப்பெருக்கை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில், சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

விஜய்யை ஏமாற்ற முயன்ற யோகிபாபு

image

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் விஜய்யுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியபோது, தான் சீட்டிங் செய்ததாக யோகிபாபு தெரிவித்துள்ளார். விஜய் அணி அடித்த சிக்ஸரை ஃபோர் என கூறி போங்காட்டம் செய்ததாகவும், ஆனால் விஜய் முறையிட்டு அதை சிக்ஸராக மாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அந்த போட்டியின் போது கீழே விழுந்தெல்லாம் விஜய் ஃபீல்டிங் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

ஜூலை மாதத்தில் 95.35 லட்சம் பேர் பயணம்

image

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் 95.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை 12 ஆம் தேதி 3,50,545 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,01,182 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இது தான் அதிகபட்ச எண்ணிக்கை என தெரிவித்துள்ளது.

News August 2, 2024

தோனியை போல் சாதித்து காட்டிய ஸ்வப்னில்

image

தோனியை போலவே ஆரம்ப காலத்தில் டிக்கெட் பரிசோதகராக இருந்து, தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்வப்னில் குசாலே. தோனியிடம் இருந்து உத்வேகம் பெற்றதாகவும், தன்னால் இந்தியாவிற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ததாகவும் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

News August 2, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 2 | ▶ஆடி – 17 ▶கிழமை: வெள்ளி ▶திதி: திரயோதசி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 01:15 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM >▶குளிகை: 07:30 AM – 09:00 AM ▶சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News August 2, 2024

யாருடைய அனுமதியும் தேவையில்லை: விஜய் மில்டன்

image

விஜயகாந்த் மீதான அன்பை வெளிப்படுத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை என இயக்குநர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார். விஜயகாந்தை AI மூலம் காட்சிப்படுத்த அவரது குடும்பத்தினரின் அனுமதி தேவைதான் எனவும், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் கேப்டனை கொண்டு வந்து தனது அன்பை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, AI மூலம் விஜயகாந்தை காட்சிப்படுத்தும் முன் அனுமதி பெற வேண்டும் என பிரேமலதா கூறியிருந்தார்.

News August 2, 2024

அச்ச உணர்வை அதிகரிக்கிறது: டிடிவி

image

கோவையில் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது போன்ற செய்திகள் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை அதிகரிக்க செய்வதாகவும், போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தாததே இதற்கு காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பள்ளிகளுக்கு அருகே இருக்கும் மதுக்கடைகளை அகற்றவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News August 2, 2024

புத்தர் பொன்மொழிகள்

image

➤ஒரு கணத்தால் ஒரு நாளை மாற்ற முடியும், ஒரு நாளால் ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும், ஒரு வாழ்க்கையால் இந்த உலகை மாற்ற முடியும். ➤நமக்கு நடக்கும் அனைத்திற்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். ➤நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நம்முடைய செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன. ➤உங்கள் செயல்கள் மட்டுமே உங்களது உண்மையான உடமைகள்.

News August 2, 2024

தோனிக்காக CSK நிர்வாகம் எடுத்த முடிவு

image

2008-2021 வரை செயல்பாட்டில் இருந்த Uncapped Player விதியை மீண்டும் கொண்டு வர BCCI உடனான ஆலோசனை கூட்டத்தில் CSK நிர்வாகம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விதியின் படி, சர்வதேச வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு Uncapped Player ஆக வகைப்படுத்தப்படுவர். தோனி Uncapped Player ஆக வகைப்படுத்தபட்டால், கூடுதலாக ஒரு இந்திய வீரரை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு CSK-வுக்கு கிடைக்கும்.

error: Content is protected !!