news

News August 2, 2024

Olympics: கூகுள் வெளியிட்ட பாய்மரப்படகு சிறப்பு டூடுல்

image

பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் 8ஆவது நாளாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில், பாய்மரப் படகில் நீலக்கடல் பறவையொன்று, கடலை நோக்கி பயணிப்பதை ஆழி கொக்குக்குள் வேடிக்கைப் பார்ப்பது போன்ற குறியீடு இடம்பெற்றுள்ளது. Sailing போட்டி மார்சேயில் கடற்கரையில் இன்று நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

“ராக் ஸ்டார்” தேவி ஸ்ரீபிரசாத்துக்கு இன்று பர்த்டே

image

தமிழ் திரையுலகின் வெற்றிகர இளம் இசையமைப்பாளர்களில் ’ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீபிரசாத்தும் (DSP) ஒருவர். தமிழில் சிங்கம், சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும், சச்சின், கந்தசுவாமி, வேங்கை, புஷ்பா உள்பட பல படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களுக்கு DSP இசையமைத்துள்ளார். இன்று அவரது பிறந்த நாள் ஆகும். அதேபோல், திரைத்துறைக்கு அவர் வந்து இந்தாண்டுடன் 25 ஆண்டுகளாகின்றன.

News August 2, 2024

Olymmpics: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

image

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோல்வியடைந்தார். நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து), சீனாவின் ஜெங் கின்வென்னுடன் மோதினார். இந்த போட்டியில் அவர் 2-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் ஜெங் கின்வென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் இன்று விளையாட உள்ளார்.

News August 2, 2024

இந்திய நிர்வாகம் ஆங்கிலேய அரசின் கைகளுக்கு சென்றநாள்

image

இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் 2 மிகவும் முக்கிய நாளாகும். இந்தியா முதலில் காலனியாதிக்கத்தில் இருந்தபோது பிரிட்டனைச் சேர்ந்த கிழக்கிந்திய கம்பெனியால் நிர்வகிக்கப்பட்டது. 1858 ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கிழக்கிந்திய கம்பெனியிடம் உள்ள இந்திய நிர்வாகத்தை அரசு கையில் எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்திய நிர்வாகம், பிரிட்டன் அரசின் கைகளுக்கு ஆகஸ்ட் 2இல் கைமாறியது.

News August 2, 2024

வயநாடு: 27 மாணவர்கள் மரணம்

image

வயநாட்டில் கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குறித்த தகவல்கள் நெஞ்சை பதறச் செய்கிறது. முண்டக்கை கிராமத்தில் உள்ள அரசு முதன்மை பள்ளி, வெள்ளர்மலா பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்த 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், 23 பேர் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து, இரு பள்ளிகளிலும் ஆசிரியர், மாணவர்களுக்கு இன்று மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.

News August 2, 2024

ஆடி வெள்ளியன்று அம்மன் வழிபாடு

image

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் கூட்டம் அலை மோதும். இதற்கு, ஆடி வெள்ளியன்று பக்தர்களுக்கு கேட்டதை மறுக்காமல் அம்மன் அருள்வார் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டு இருப்பதே காரணம். இதனால் ஆடி வெள்ளி விரதம் இருந்து, அம்மன் கோயில்களுக்கு காலையிலேயே குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தி, அங்கு வரும் பக்தர்களுக்கு கூழ் ஊற்றி வழிபடுவதை பக்தர்கள் தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.

News August 2, 2024

கிரிக்கெட்டில் தோற்றதால் மீனவர் கொலை: ஜெயக்குமார்

image

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்கு பழிவாங்க தமிழக மீனவரை இலங்கை கடற்படை கொலை செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், மீனைக் கொண்டு வந்து ஊருக்கு உணவளிக்கும் மீனவனையே கொன்ற இலங்கை கடற்படையின் கொடுஞ்செயலுக்கு மோடி அரசும் ஸ்டாலின் அரசும் என்ன நீதியை பெற்றுத் தரப்போகிறது? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

News August 2, 2024

OLYMPICS: பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 2வது இடம்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பதக்க பட்டியலில் நேற்று சீனா முதலிடத்திலும், பிரான்ஸ், ஜப்பான் 2 மற்றும் 3வது இடங்களிலும் இருந்தன. அமெரிக்கா 6வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இன்று அமெரிக்கா அதிரடியாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 9 தங்கம் உள்பட 37 பதக்கத்தை அந்த நாடு வென்றுள்ளது. சீனா (11 தங்கம்) முதலிடத்திலும், பிரான்ஸ் (8 தங்கம்) 3வது இடத்திலும், இந்தியா (3 வெண்கலம் ) 44வது இடத்திலும் உள்ளன.

News August 2, 2024

இந்தியா, இலங்கை ODI: எங்கு, எப்போது காணலாம்?

image

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகளும் (இன்று, 4, 7ம் தேதிகளில் ) கொழும்பு பிரேமதேச மைதானத்தில் நடக்கின்றன. மதியம் 2.30 மணிக்கு இன்றைய போட்டி தொடங்குகிறது. Sony Sports குழும விளையாட்டு சேனல்களில் போட்டிகளை காணலாம். செயலியில் காண வேண்டும் எனில், Sony Liv செயலியில் காணலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

News August 2, 2024

மீண்டும் Sun pictures தயாரிப்பில் தனுஷ்?

image

Sun pictures நிறுவன தயாரிப்பில் தனுஷ் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அந்த நிறுவன தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதையடுத்து, தனுஷை வைத்து மீண்டும் படம் தயாரிக்க Sun pictures பேசி வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!