India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து அறிக்கை தர, மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்காக, 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, ஒரு இணைப்புக்கு ஆண்டுதோறும் ₹30,000ஐ மின்துறைக்கு வேளாண்துறை வழங்குகிறது. இந்நிலையில், இலவச மின்சாரத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக புகார் வந்ததால், ஆராய்ந்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் நிர்வாகிகளின் வம்சமே விளங்காது என்று அக்கட்சி தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை சாபம் விடுத்துள்ளார். எல்லா மாவட்டங்களிலும் நம் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்கள் குறித்து குமுறல்கள் கேட்பதாகக் கூறிய அவர், இந்த நிலை விரைவில் மாறும் எனக் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் மீண்டும் காமராஜரின் ஆட்சியை அமைக்க கடினமான உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான திடீர் லாப வரியை (WT) மெட்ரிக் டன்னுக்கு ₹4,600இல் இருந்து ₹2,100 ஆக மத்திய அரசு (47%) குறைத்துள்ளது. நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஏற்றுமதி மூலம் அதிக லாபம் அடையும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கடிவாளம் போடவும் WT வரி விதிக்கப்படுகிறது. WT வரி விகிதம் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.
ஊராட்சி மணி என்ற “155340” இலவச தொலைபேசி மையத் திட்டத்தை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நீங்கள் வசிக்கும் பஞ்சாயத்து பகுதியில் நிலவும் குறைபாடுகள், குற்றச்சாட்டுகளை நீங்கள் இதில் தெரிவிக்கலாம். சாலை வசதி சரியில்லை, சாலை வசதி வேண்டும், குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை, குடிநீர் குழாய் வேண்டும், தெரு விளக்கு வசதி வேண்டும் என்பன போன்றவற்றை கூறி, நிவர்த்தி செய்துகொள்ளலாம். SHARE IT
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். டெல்லியில் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரிடம், மல்யுத்தத்தை தொடர்வீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “எனது போராட்ட குணம் ஓயும் வரை, என் மல்யுத்தமும் ஓயாது” என பதிலளித்தார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர்கள் பின்பற்றுமாறும், கனமழைக்கு முன்னதாகவே, தேவைப்படக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை, முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கும்படியும் கூறியுள்ளது.
உணவு உட்கொண்டதும் ஜூஸ் குடிக்கலாமா? கூடாதா? என சந்தேகம் இருக்கும். அதுகுறித்து மருத்துவர்கள் சொல்லும் யோசனைகளை தெரிந்து கொள்ளலாம். சாப்பிட்டதும் ஜூஸ் குடித்தால் அந்த நேரம் மட்டும் புத்துணர்ச்சி ஏற்படும் என்றும், பிறகு உடல்நலப் பிரச்னை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். செரிமான பிரச்னை ஏற்பட்டு மலம் கழிப்பது பாதிக்கப்படும். இது எடையை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் கையில் ரத்தக்கறை இருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தஞ்சாவூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேசிய இபிஎஸ், “திமுகவின் நீட் ரத்து நாடகத்தை நம்பி பல மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர். அவர்களின் ரத்தக்கறை முதல்வரின் கையில்தான் உள்ளது. நீட் தேர்வு ரத்து ரகசியம் எப்போது வெளியாகும்?” என இபிஎஸ் கேள்வியெழுப்பினார்.
தனது தந்தைக்கும், தங்களுக்கும்தான் முன் விரோதம் என கூறி, ஆம்ஸ்ட்ராங் உடன் அஸ்வத்தாமன் இணக்கமாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை ‘அங்கிள்’ என்று அழைத்து வந்ததாகவும், நட்பு பாராட்டுவது போல நடித்ததாகவும் தெரிகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தால் வடசென்னை பகுதியில் அரசியல் செய்ய முடியாது என நினைத்த அஸ்வத்தாமன், கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.
உலகில் உயரம் குறைந்த மனிதர்கள் அதிகமுள்ள நாடு எது என்பது அனைவருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறியே. அதை இங்கு பார்க்கலாம். தென் கிழக்கு ஆசிய நாடான திமோர் லெஸ்டி மக்களின் சராசரி உயரம் 5.1 அடியாகும். இதில் ஆண்களின் சராசரி உயரம் 5.2 அடியாகும். பெண்களின் சராசரி உயரம் 4.11 அடியாகும். இந்த பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் உள்ளது. இந்தியர்களின் சராசரி உயரம் 5.2 அடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.