India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு மதுக்கடைகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மது விற்பனை 4% குறைந்திருக்கிறது. இதனால், இம்மாதம் முதல் மது விற்பனையை 5% அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலக்கு எட்டப்படவில்லை எனில், மாதாந்திரக் கூட்டத்தில், அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டுமாம். அரசின் இம்முடிவுக்கு ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்சார் போர்டு (CBFC) U, UA, A, S என 4 விதமான சான்றுகளை திரைப்படங்களுக்கு வழங்குகிறது. இதில் U என்றால் அனைத்து வயதினரும் பார்க்க உகந்த திரைப்படம் என அர்த்தம். UA அல்லது U/A என்றால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் துணையோடு பார்க்க வேண்டும். A என்றால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க உகந்த படம். இதுதவிர, மக்கள் பார்வைக்கு அல்லாத படங்களுக்கு S சான்றிதழ் வழங்கப்படுகிறது.
P2P கடன் செயலிகள் மற்றும் NBFC கடன் நிறுவனங்களுக்கான விதிகளை RBI கடுமையாக்கியுள்ளது. கடன் செயலிகளில் ஏராளமான விதி மீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், அவை எந்தவொரு காப்பீடு திட்டத்தையும் விற்பனை செய்யக்கூடாது எனவும், தகுதி இல்லாத நபர்களுக்கு கடன் வழங்கக் கூடாது என்றும் RBI அறிவுறுத்தியுள்ளது. P2P செயலிகள் கடன் வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் இடைத்தரகராக செயல்படுகின்றன.
“G.O.A.T” ட்ரெய்லரில் “DO YOU THINK YOU CAN STOP ME?, NO ONE CAN STOP ME” என்ற விஜய்யின் வசனம், அரசியல் பஞ்சாக வைரலாகி வருகிறது. அதேபோல், “அண்ணே வரார் வழிவிடு” போன்ற பல டயலாக், அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ரா உளவாளியாக அப்பா விஜய்யும், அவருக்கு உதவி செய்யும் மகன் (AI) விஜய்யும் தோன்றும் காட்சியில் விசில் பறக்கப்போகிறது. G.O.A.T ட்ரெய்லர் பிடித்திருக்கிறதா? என்பதை கமெண்ட் செய்யுங்க.
குண்டர் சட்டம் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. வங்கிகளில் ரூ.3.30 கோடி வாங்கி மோசடி செய்ததாக செல்வராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், “முதலில் குண்டர்கள் யார் என்று தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். சர்வ சாதாரணமாக குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசிக தலைவர் திருமாவுக்கு நடிகரும், TVK தலைவருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். TVK கட்சியை தொடங்கியதிலிருந்து, அரசியலில் மிகவும் ஆக்டிவாக உள்ள விஜய், இன்று 62வது பிறந்தநாளை கொண்டாடும் திருமாவை ஃபோனில் அழைத்து வாழ்த்தினார். அப்போது, இருவரும் சுமார் 5 நிமிடங்கள் வரை ஃபோனில் பேசிக்கொண்ட நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் ஜொலிக்க வேண்டும் என, திருமா வாழ்த்தியதாக தெரிகிறது.
இந்தியாவில் மருத்துவ மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக UG மற்றும் PG மருத்துவ மாணவர்களிடையே BBC நடத்திய சர்வேயில், கடந்த ஓராண்டில் 16.2% பேர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு படிக்கும் சூழல், நிதிச்சுமை, ராகிங், தனிமை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. *தற்கொலை தீர்வல்ல. உதவிக்கு Call 104
தமிழக அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்கள், சென்னையில் எங்குள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். 1) திமுக – தேனாம்பேட்டை 2) அதிமுக – ராயப்பேட்டை 3) காங்கிரஸ் – ராயப்பேட்டை 4) பாஜக – தியாகராயநகர் 5) விசிக – அசோக்நகர் 6) மதிமுக – எழும்பூர் 7) பாமக – தியாகராயநகர் 8) நாம் தமிழர் கட்சி – வளசரவாக்கம் 8) இ. கம்யூ – தியாகராயநகர் 9) மார்க். கம்யூனிஸ்ட் – தியாகராயநகர் 10) மநீம – ஆழ்வார்பேட்டை
7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதனை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதையொட்டி, அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அபரிமிதமாக வளர்ச்சி பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், UPI பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க பல்வேறு அப்டேட்களை செயலிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த வகையில், UPI Circle என்ற புதிய வசதியை NPCI அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் UPI கணக்கை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என, 5 பேர் வரை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.