India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணக்கார சீன தம்பதிகள் குழந்தைகளுக்கான கடமைகளை நிறைவேற்ற தொழில்முறை பெற்றோர்களை நியமிக்கின்றனர். குழந்தையின் மன ஆரோக்கியம், கல்வித் திறன் மற்றும் அவர்களின் அன்றாட தேவைகளில் கவனம் செலுத்துவதற்காக நியமிக்கப்படும் தொழில்முறை பெற்றோர்கள், தோராயமாக மாதம் ₹1,17,000 முதல் ₹3,43,000 வரை சம்பளம் பெறுகின்றனர். இவர்கள் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களாக உள்ளனர்.
கேப்டன் பொறுப்புக்கு பவுலர்களே சரியான தேர்வு என பும்ரா கூறியுள்ளார். பவுலர்கள் மிகவும் திறமையானவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், கபில் தேவ், இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாகர் யூனிஸ், பாட் கம்மின்ஸ் போன்ற பவுலர்கள், கேப்டன் பொறுப்பில் சிறந்து விளங்கினார்கள் என்றார். மேலும், இந்தியாவில் உள்ள ரசிகர்கள், மிகப்பெரிய பேட்ஸ்மேன்களை மட்டும் விரும்புவது தனக்கு புரிகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டில், இன்றைய நாள் (17.8.2024) அதிசயமான ஒரு நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் இன்றைய நாள், மாதம், வருடம் இவை மூன்றையும் தனித்தனியாக கணக்கிட்டால் 8 என்ற எண் வரும். உதாரணத்திற்கு 17ஆம் தேதியை கூட்டினால் 8. மாதம் – 8. வருடம் 2024, இதனை கூட்டினால் 8 வரும். ஆக இன்றைய நாளை கணித முறைப்படி கணக்கிட்டால் (17.8.2024) 8.8.8 என முடியும். இந்த அதிசய நாளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க
நாட்டிலேயே, உத்தரப்பிரதேசத்தில் தான் ராம பக்தர்கள் அதிகம். அதனை நிரூபிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் Photo ஒன்று வைரலாகியுள்ளது. அதில், அயோத்தி காவல் நிலைய அதிகாரி அமரும் இருக்கையில், ராம பக்தரான குரங்கு ஒன்று உள்ளது. அதைப் பார்த்த போலீஸ் அதிகாரி, அதனை விரட்டுவதற்கு பதில், சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
*மேஷம் – துணிவுடன் செயல்படும் நாள்
*ரிஷபம் – பக்தி பரவசம் உண்டாகும்
*மிதுனம் – நட்பு வட்டம் பெருகும்
*கடகம் – உடல்நலம் மேலோங்கும்
*சிம்மம் – நிதியுதவி செய்யும் நாள்
*கன்னி – இன்பம் தேடி வரும்
*துலாம் – போட்டியை தவிர்க்கவும்
*விருச்சிகம் – பெருமையான நாள்
*தனுசு – செலவு அதிகரிக்கும்
*மகரம் – உறுதியான முடிவு எடுக்கலாம் *கும்பம் – சுகமான நாள் *மீனம் – ஆக்கப்பூர்வமான நாள்
தமிழ்நாட்டில் நள்ளிரவு ஒரு மணி வரை 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில மணி நேரமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, குமரி, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இபிஎஸ், பிரிந்து சென்ற அதிமுகவினரை மீண்டும் இணைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை தவிர்த்து, மற்றவர்களை இணைக்க முயற்சி நடைபெறவுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ் அணியில் இருக்கும் சில முக்கிய தலைகளை தங்கள் பக்கம் இணைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
AIRTEL, JIO ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்ததில் இருந்து மக்கள், BSNL SIM வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ₹997க்கு அசத்தலான ரீசார்ஜ் பிளானை BSNL வழங்கியுள்ளது. 160 நாள்கள் வேலிடிட்டியுடன் இந்த பிளானில், ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 SMS, வரம்பற்ற அழைப்பு வசதி அளிக்கப்படுகிறது. பிற நெட்வொர்க்குகள் இந்த பிளானை 84 நாள்கள் வழங்குகின்றன. நீங்கள் எந்த SIM கார்டு பயன்படுத்துகிறீர்கள்?
2024 மகளிர் T20 WC தொடர், ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் வங்கதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட கலவரத்தால், இந்தியா அல்லது UAEஇல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், ஜிம்பாப்வேயில் சாதகமான சூழல் நிலவுவதால் அங்கு WC போட்டி நடத்தப்படலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் T20 WC தொடர் அக்.3-20 வரை நடைபெற உள்ளது.
அரியானா சட்டசபைக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்தின் பிரதான கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., கட்சி MLAக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து பாஜகவை நோக்கி செல்கின்றனர். அரியானாவின் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்.1இல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை ஜேஜேபி கட்சி வாபஸ் பெற்றது. இதனால், சுயேச்சை ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்தது.
Sorry, no posts matched your criteria.