India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா நடத்திய உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நேற்று நடைபெற்ற மாநாட்டில் உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றம், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காணொளி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இது 3ஆவது உச்சி மாநாடாகும்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: நீத்தார் பெருமை ▶குறள் எண்: 26 ▶குறள்: செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். ▶பொருள்: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற பல கொரியன் ஹாரர் சீரிஸ்கள் உள்ளன. 2021ஆம் வெளியான Squid Game, வரலாற்று தொடரான Kingdom ஆகியன பலரது விருப்ப சீரிஸ்களாக உள்ளது. மேலும், 2020 – 2023 வரை பல சீசன்களாக வெளிவந்த The Uncanny Counter, சயின்ஸ் ஃபிக்சன் ஹாரர் சர்வைவல் தொடரான Alice in Borderland, ஜாம்பிகளிடம் இருந்து தப்பிக்க போராடும் Sweet Home ஆகிய தொடர்களும் வரவேற்பை பெற்றுள்ளன.
உத்தரபிரதேசத்தில் காப்பகத்தில் வசிக்கும் விதவை மற்றும் ஆதரவற்ற பெண்கள், பிரதமர் மோடிக்கு தாங்கள் செய்த ராக்கிகளை அனுப்பியுள்ளனர். மொத்தம் 551 ராக்கிகள் அனுப்பப்பட்டுள்ளதாக காப்பகத்தின் துணை தலைவர் வினிதா வர்மா தெரிவித்துள்ளார். மற்ற பெண்களை போல விதவை பெண்களும் கலாச்சார விழாக்களை கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் நாளை ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியாவில் இனி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த போவதில்லை என BCCI செயலாளார் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 5 நாள்களுக்கும் சேர்த்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கும் நிலையில், போட்டி 2, 3 நாள்களுக்குள் முடிந்து விடுவதாகவும், இதனால் மீதம் உள்ள நாள்களுக்கான டிக்கெட் விலையை தங்களால் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரசிகர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு தமிழ் பிடிக்கவே பிடிக்காது என நடிகை சங்கீதா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தெலுங்கு தான் பிடிக்கும் என்றும், எத்தனை பேர் கோபப்பட்டாலும் அது பற்றி தனக்கு கவலை இல்லை எனவும் அவர் ஓப்பனாக பேசியுள்ளார். மேலும், தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் மரியாதை தமிழ் சினிமாவில் கொடுக்க மாட்டார்கள் என கூறியுள்ளார். சங்கீதாவின் இந்த பேச்சை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் தனது கடையில் நடந்த வழிப்பறியின் போது மைனக் படேல் (36), சிறுவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வயது காரணமாக சிறுவனின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. படேலுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளார். மேலும், அவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடைக்கு வரும் அனைவரிடமும் அவர் அன்பாக நடந்து கொள்வார் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஆகஸ்ட் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பணக்கார சீன தம்பதிகள் குழந்தைகளுக்கான கடமைகளை நிறைவேற்ற தொழில்முறை பெற்றோர்களை நியமிக்கின்றனர். குழந்தையின் மன ஆரோக்கியம், கல்வித் திறன் மற்றும் அவர்களின் அன்றாட தேவைகளில் கவனம் செலுத்துவதற்காக நியமிக்கப்படும் தொழில்முறை பெற்றோர்கள், தோராயமாக மாதம் ₹1,17,000 முதல் ₹3,43,000 வரை சம்பளம் பெறுகின்றனர். இவர்கள் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களாக உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.