India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவித்த 4 குழந்தைகள் உள்பட 6 பேரை 8 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இதுபோன்ற ஹீரோக்களின் செயல்களால் இருண்ட காலத்திலும் கேரளாவின் புகழ் பிரகாசமாக மிளிர்வதாகவும், நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து மீண்டும் வலிமையாக மீண்டெழுவோம் என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
TNPL 2ஆவது தகுதி சுற்றில் திருப்பூர் அணியும், திண்டுக்கல் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர், 19.4 ஓவர்கள் முடிவில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 10.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை (ஆக. 4) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கோவை அணியை எதிர் கொள்ள உள்ளது.
இன்று (ஆகஸ்ட் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஆகஸ்ட் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ➤தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ➤UGC NET தேர்வுகள் ஆக. 21ஆம் தேதி முதல் செப். 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ➤அரசுப்பள்ளி மாணவர்களின் உயர் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
*மாலை 4 மணிக்கு மேல் தூங்குவதைத் தவிர்த்திடுங்கள். *தூங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். *6 மணி நேரத்திற்கு முன்பு காபின் கலந்த பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். *மதியம் 12 மணிக்கு பிறகு டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்திடுங்கள். *மென்மையான இசையை படுக்கை அறையில் ஒலிர விட்டு, உடலை தளர்வாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கரின் பயிற்சியாளர், சமரேஷின் வீட்டை இடிக்க உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் என்பதால் 2 நாள்களில் இடிக்க உள்ளதாக டெல்லி நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், 75 வருடங்களாக அங்கு வசிப்பதாக கூறியுள்ள சமரேஷ், 2 மாதம் அவகாசம் வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளாவுக்கு சென்றுள்ள 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், முழு முனைப்புடன் மீட்புப் பணிகள் ஈடுபட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 2 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவ, தமிழகம் தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.
*மேஷம் – புகழ் கிடைக்கும்
*ரிஷபம் – தெளிவான சிந்தனை தேவை
*மிதுனம் – ஆக்கப்பூர்வமான நாள்
*கடகம் – விவேகத்துடன் செயல்பட வேண்டும்
*சிம்மம் – உழைப்புக்கேற்ற உயர்வு
*கன்னி – போட்டியை தவிர்க்கவும்
*துலாம் – நிதியுதவி செய்யும் நாள்
*விருச்சிகம் – அலைச்சல் அதிகரிக்கும்
*தனுசு – பகை ஏற்படும்
*மகரம் – ஓய்வு அவசியம் *கும்பம் – வரவு அதிகரிக்கும் *மீனம் – நன்மை நடக்கும் நாள்
மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான உணவு தேன். ஆயுர்வேதத்தில் தேனுக்கு முக்கிய இடமுண்டு. ஆனால், தேனை சில உணவுப்பொருட்களுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பால் மற்றும் வெந்நீரில் தேனை கலந்து சாப்பிட வேண்டாம் எனவும், இது ஆன்டி ஆக்சிடண்ட்டுகளை சிதைப்பதாகவும் கூறுகின்றனர். அதேபோல, மீன், இறைச்சி, சர்க்கரை, நெய், தயிர் ஆகியவற்றுடன் தேனை கலக்க வேண்டாம் என்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.