news

News August 18, 2024

ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது

image

நேற்று தொடங்கிய மருத்துவர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக புறநோயாளிகள் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News August 18, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 18 ▶ஆவணி – 02 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 01:30 PM – 02:00 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 01:30 PM – 02:30PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM >▶திதி: சுன்ய திதி▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

News August 18, 2024

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்

image

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக RMC தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

News August 18, 2024

எங்கள் சண்டை முடியவில்லை: வினேஷ் போகத்

image

பிரிஜ் பூஷனுக்கு எதிரான தங்களது நீண்ட சண்டை இன்னும் முடியவில்லை என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அது குணமாவதற்கு நேரம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவேனா அல்லது தொடர்வேனா என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு

image

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ₹100 நாணயத்தை வெளியிட உள்ளார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், சென்னையில், மண்டல கடல் மாசகற்றும் மையத்தையும் ராஜ்நாத் சிங் திறந்து வைக்க உள்ளார்.

News August 18, 2024

முகமது அலி பொன்மொழிகள்

image

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் இருக்கும் ஒருவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், எதையும் சாதிக்க மாட்டார்கள். *மற்றவர்களுக்குச் செய்யும் சேவை என்பது பூமியில் உள்ள உங்கள் அறைக்கு நீங்கள் செலுத்தும் வாடகையாகும்.

News August 18, 2024

இளைஞர் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்?

image

2030ல் நடைபெற உள்ள இளைஞர் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் (IOC) இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக ICC தெரிவித்துள்ளது. இளைஞர் ஒலிம்பிக்ஸை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்தார். அதேபோல் 2028ல் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் நிச்சயமாக இருக்கும் என IOC உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 18, 2024

4 ஆண்டுகளாக சம்பளம் வாங்காத அம்பானி

image

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 4ஆவது ஆண்டாக இந்த நிதி ஆண்டிலும் சம்பளம் பெறாமல் வேலை செய்து வருகிறார். அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது, அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். இருப்பினும், அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் உள்பட நிறுவனத்தில் வேலை செய்யும் பிற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

மனதளவில் தயாரானேன்.. ஆனால்?: நீரஜ்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு மனதளவில் தயாரானாலும், உடல் ரீதியான தயார்படுத்தலில் கொஞ்சம் போதாமை இருந்ததாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். தன்னால் முடியாது என எப்போதும் நினைத்ததில்லை எனவும், தன்னுடைய அனைத்து முயற்சிகளும் அன்று வீணானதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆக.22ஆம் தேதி தொடங்கும் லாசன்னே டைமண்ட் லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News August 18, 2024

ஆகஸ்ட் 18: வரலாற்றில் இன்று

image

▶1227 – மங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் இறந்த நாள். ▶1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ▶1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. ▶1928 – சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. ▶1945 – விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்த நாள்.

error: Content is protected !!