news

News August 17, 2024

பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை

image

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதனை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதையொட்டி, அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

News August 17, 2024

UPI பரிவர்த்தனையில் சூப்பரான அப்டேட்…

image

இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அபரிமிதமாக வளர்ச்சி பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், UPI பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க பல்வேறு அப்டேட்களை செயலிகள் தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த வகையில், UPI Circle என்ற புதிய வசதியை NPCI அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் UPI கணக்கை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என, 5 பேர் வரை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News August 17, 2024

சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்திருந்தால்…

image

சிறுநீரை நேரம் தாழ்த்தாமல் கழித்து விட வேண்டும். இல்லையேல் கீழ்காணும் 5 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 1) சிறுநீரை கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீரகத்தில் கல் உருவாக காரணமாகும் 2) சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட வழிவகுக்கும் 3) சிறுநீர் பை சுமை தாங்க முடியாமல் சேதமாகும் 4) சிறுநீரை தேக்கி வைக்கும் சிறுநீர் பையில் வலி உருவாகும் 5) இடுப்புப் பகுதி தசைகளை பலவீனமாக்கும்.

News August 17, 2024

தேர்தல் பிரசாரத்தில் ராகுலை பின்பற்றும் டிரம்ப்

image

2024 மக்களவைத் தேர்தலின்போது, ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது தெரிந்ததே. அதே பாணியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கும் டிரம்பும் பிரசாரம் செய்து வருகிறார். அதாவது, ஜனநாயகக் கட்சியிடமிருந்து அமெரிக்காவை கர்த்தர்தான் காக்க வேண்டுமென்ற பொருளில் ‘God Bless The USA’ எனப் பெயரிடப்பட்ட பைபிளை விற்பனை செய்து வருகிறார். இதன் விலை ₹5,000 ஆகும்.

News August 17, 2024

ஊசிக்கு பதில் நாக்கு ஃபோட்டோ.. அசத்தும் AI

image

மனிதர்களின் நோய்களை நாக்கின் நிறம் மற்றும் வடிவத்தை வைத்தே கண்டறியலாம் என்றொரு தியரி உண்டு. வெறும் கண்களில் பார்த்தால் இதை கண்டறிய முடியாது. இந்நிலையில், இதற்கென AI இயந்திரம் ஒன்றை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாக்கின் புகைப்படத்தை வைத்தே சர்க்கரை, பக்கவாதம், சிறுநீரக பிரச்சினை, கல்லீரல் பிரச்னை, ரத்த சோகை உள்ளிட்ட பல நோய்களை 98% துல்லியமாக இது கண்டறிவதாகத் தெரிகிறது.

News August 17, 2024

இலவச மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்க ஆணை

image

விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து அறிக்கை தர, மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்காக, 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, ஒரு இணைப்புக்கு ஆண்டுதோறும் ₹30,000ஐ மின்துறைக்கு வேளாண்துறை வழங்குகிறது. இந்நிலையில், இலவச மின்சாரத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக புகார் வந்ததால், ஆராய்ந்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 17, 2024

காங்கிரஸுக்கு துரோகம் செய்தால் வெளங்க மாட்டார்கள்!

image

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் நிர்வாகிகளின் வம்சமே விளங்காது என்று அக்கட்சி தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை சாபம் விடுத்துள்ளார். எல்லா மாவட்டங்களிலும் நம் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்கள் குறித்து குமுறல்கள் கேட்பதாகக் கூறிய அவர், இந்த நிலை விரைவில் மாறும் எனக் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் மீண்டும் காமராஜரின் ஆட்சியை அமைக்க கடினமான உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News August 17, 2024

கச்சா எண்ணெய் மீதான வரி 47% குறைப்பு!

image

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான திடீர் லாப வரியை (WT) மெட்ரிக் டன்னுக்கு ₹4,600இல் இருந்து ₹2,100 ஆக மத்திய அரசு (47%) குறைத்துள்ளது. நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஏற்றுமதி மூலம் அதிக லாபம் அடையும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கடிவாளம் போடவும் WT வரி விதிக்கப்படுகிறது. WT வரி விகிதம் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது.

News August 17, 2024

குடிநீர் வரலையா? இதில் புகார் கூறலாம்

image

ஊராட்சி மணி என்ற “155340” இலவச தொலைபேசி மையத் திட்டத்தை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நீங்கள் வசிக்கும் பஞ்சாயத்து பகுதியில் நிலவும் குறைபாடுகள், குற்றச்சாட்டுகளை நீங்கள் இதில் தெரிவிக்கலாம். சாலை வசதி சரியில்லை, சாலை வசதி வேண்டும், குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை, குடிநீர் குழாய் வேண்டும், தெரு விளக்கு வசதி வேண்டும் என்பன போன்றவற்றை கூறி, நிவர்த்தி செய்துகொள்ளலாம். SHARE IT

News August 17, 2024

என் மல்யுத்தம் ஓயவே ஓயாது: கர்ஜித்த வினேஷ் போகத்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். டெல்லியில் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரிடம், மல்யுத்தத்தை தொடர்வீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “எனது போராட்ட குணம் ஓயும் வரை, என் மல்யுத்தமும் ஓயாது” என பதிலளித்தார்.

error: Content is protected !!