India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹரியானா அரசு வேலைகளில் பட்டியலின மக்களுக்கு (SC) 20% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். ஹரியானா மாநில அரசால் அமைக்கப்பட்ட பட்டியலின சாதிகளுக்கான கமிஷன் அளித்த அறிக்கையை அமைச்சரவை ஏற்று, அதன் பரிந்துரையான SC மக்களுக்கான இடஒதுக்கீட்டை 10% இருந்து 20%ஆக உயர்த்த முடிவெடுத்துள்ளது. இது தேர்தலுக்கு பின்னர் நடைமுறைக்கு வருமெனக் கூறப்படுகிறது.
நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ₹4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து, நிதி நிறுவனம், தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ₹500 கோடி மோசடி செய்த புகாரில் அவர் கைதாகியுள்ளார்.
வேக வைத்த மட்டனோடு, கரம் மசாலா, இஞ்சி, பூண்டு, மிளகு, உப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா இலைகளைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை விரும்பும் வடிவில் செய்துகொள்ளவும். அதனை கலக்கி வைத்த முட்டையில் பிரட்டி, அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவவும். அதன் பின் எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான மட்டன் கட்லெட் ரெடி. இதனை சாஸுடன் தொட்டு சாப்பிடலாம்.
அமைச்சர்களுக்கு CM ஸ்டாலின் புது கட்டுப்பாடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களிடம் துறை சார்பாக வரும் செய்திகளுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும். அதேநேரம் பத்திரிகைகளிடம் தேவையில்லாதவை குறித்து பேசக் கூடாதென்று அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் பதவி, நடிகர்-நடிகையர் குறித்து பேசியதற்கு கடிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
காங்கிரஸின் தேசிய வார்ரூம் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி., சசிகாந்த் செந்தில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் வாக்குறுதிகள், கொள்கை பிரசாரம் வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய அவர், மக்களின் மனநிலையை தெளிவாக கணிப்பதில் வல்லவராக கருதப்படுகிறார். ராகுலின் நம்பிக்கையை பெற்றதன் காரணமாக அவர் மீண்டும் வார்ரூம் தலைவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
நாட்பட்ட தோல் நோய்களை சரிசெய்யும் ஆற்றல் மாலை மங்கும் வேளையில் பூக்கும் நல்வேளை செடிக்கு இருப்பதாக சித்த நூல் கூறுகிறது. கெப்பாரிடேசியே, பீட்டா-கரோடீன், க்ளியோகைனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் இளம் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் வெள்ளைப் பூண்டோடு சேர்த்துக் காய்ச்சி, உடலுக்கு தேய்த்துக் குளித்தால் உடலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை, பாக்டீரியா & பூஞ்சைத் தொற்றுக்கள் நீங்குமாம்.
அனைத்து சமூக வலைதளங்களிலும், உங்களுக்கு ஏதேனும் பதிவு பிடித்திருந்தால் அதனை LIKE செய்யலாம். இந்நிலையில், Whatsapp ஸ்டேட்டஸ்களுக்கும், இதே போன்ற ஆப்ஷனை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்டேட்டஸின் கீழ் தோன்றும் ஹார்ட் சிம்பலை கிளிக் செய்தால், அது லைக் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட்டஸ் வைத்தவருக்கு காட்டும் என விளக்கமளித்துள்ளது. அப்புறம் என்ன, ரயில் விட்டு லைக்ஸை அள்ளுவோம்.
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த மாநிலங்களில் வென்றே தீர வேண்டுமென காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. இதற்கான பணிகளை முடுக்கிவிடும் வகையில், தேர்தல் வியூகங்களை அமைக்க காஷ்மீர் கோகுல் புடெய்ல், நவீன் ஷர்மா, வம்சி ரெட்டி ‘வார்ரூம்’ பொறுப்பாளர்களாக அக்கட்சியின் தேசியத் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
H. வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே விஜய்க்கு ஜோடியாக கத்தி, தெறி, மெர்சல் ஆகிய 3 படங்களில் சமந்தா நடித்துள்ளார். இதையடுத்து விஜய்க்கு 4ஆவது படம் முறையாக இப்படத்தில் ஜோடியாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அது தற்போது உறுதியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
பாஜகவில் 10 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜெபி நட்டா, அமித் ஷா தலைமையில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் செப். 1 முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கவும், PM மோடியிடம் உறுப்பினர் பதவியை புதுப்பிப்பை துவங்கவும் முடிவு செய்யப்பட்டது. மிஸ்ட் கால், க்யூ ஆர் கோடு, நமோ செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.