India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. அதில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்புவதற்காக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 3 திருநங்கைகள் வந்துள்ளனர். அப்போது ரயில்வே காவலர், ஒரு திருநங்கையிடம் என்ன பாலினம் எனக் கேட்டு அத்துமீறினார். இதுகுறித்து திருநங்கைகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், 10 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக் கூடாது என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். வேற்று மத வழிபாட்டு தலம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை வைக்க அனுமதி கிடையாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் வேதிப்பொருள்களால் ஆன சிலைகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
தினமும் மது அருந்துவதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்? அதிலிருந்து எப்படி மீள்வது? என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை காணலாம். மது பழக்கத்தால் மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மன அழுத்தம், தூக்கமின்மை, செரிமான பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கவுன்சிலிங், தனிமையை தவிர்ப்பது, பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதால் மீளலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். SHARE IT
கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு CM ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்றிட நாம் இணைந்து பாடுபடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியதாக, ராகுல் வாழ்த்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
வயிற்றுக் குடலில் மட்டுமல்ல பலருக்கு உணவுக் குழாயிலும் அல்சர் உருவாகும். தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டாலும் இது சரியாகாது. இவர்கள் 3 வேளை உணவுக்கு பிறகு, அரை ஸ்பூன் சோம்பினை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாரினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க வேண்டும். அல்சர் புண்கள் மீது ஒரு மருந்து போல இது செயல்பட்டு, சில வாரங்களிலேயே அவற்றை சரியாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஒரு ரீசார்ஜில் 4 மொபைல் இணைப்புகளை பயன்படுத்தும் திட்டத்தை AIRTEL அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒருவர் மாதம் ₹1,199 ரீசார்ஜ் செய்தால், 4 மொபைல் எண்களுக்கும் மாதம் 190 ஜிபி டேட்டா கிடைக்கும். பயன்படுத்தாத டேட்டாவை 200 ஜிபி வரை சேமித்து வைக்க முடியும். வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், 6 மாத அமேசான் பிரைம், 1 வருடம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ளஸ் ஓடிடியும் கிடைக்கும்.
‘வாழை’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களின் வெற்றியை மாரி செல்வராஜ் தக்கவைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மனித உடலில் இருப்பதிலேயே மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது மூளை. மின்புலத்தால் தூண்டப்பட்டு சமிக்ஞைகளாகக் கடத்தும் பல பில்லியன் நரம்பணுக்களில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. அத்தகைய நுட்ப வாய்ந்த அதன் பெருமூளைப் பகுதியின் வரைபடத்தை ஹார்வர்ட் பல்கலை., & கூகுள் ஆகியவை AI உதவியுடன் விரிவாக உருவாக்கியுள்ளது. Brain Wiring பற்றிய எதிர்கால ஆய்வுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதீத காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தசைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்காக அவர் கொச்சியில் உள்ள அமிர்தா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சுவாச தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அவரை 5 நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அவர்கள் தனக்கு பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், மாமியார் மற்றும் நாத்தனார் மீது அப்பெண் கொடுத்த பாலியல் தொல்லை (354 A) வழக்கை ரத்து செய்தது. ஒரு பெண் மீது இன்னொரு பெண் பாலியல் தொல்லை வழக்கு கொடுப்பது செல்லாது எனவும் தெரிவித்தது.
Sorry, no posts matched your criteria.