India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கையை ஆண்ட தமிழ்ப்பேரரசர் ராவணனுக்கு அவனது தங்கை சூர்ப்பனகை மங்கள கயிறு கட்டி (ராக்கி), வணங்கிய நாளே ரக்ஷாபந்தன் எனக் கொண்டாப்படுகிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்பின் சின்னமான அவ்விழா நாளை (ஆக. 19) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், ராமனால் ராவணன் கொல்லப்பட்ட பத்ரர் காலத்தில், (10:53 AM – 12:37 PM) ராக்கி கட்டக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. >SHARE IT
சிம்புவின் சிலம்பாட்ட பட ஹீரோயினான செலினா ஜெட்லி, கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பள்ளி மாணவி காலத்தில் ரிக்ஷா வண்டிக்காக தாம் காத்திருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரின் அந்தரங்க உறுப்பை தன்னிடம் காட்டி அவமதித்ததாகக் கூறியுள்ளார். தனது கவனத்தை ஈர்க்க மாணவர்கள் சில நேரம் கற்களை எறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை பற்றி அவதூறாக பேச நாதக கட்சியினரை சீமான் தூண்டிவிடுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் புகார் அளித்தார். இதன்பேரில் சீமான் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான்,”கட்சியினரை தூண்டுவதுதான் என் வேலையா? என் பிள்ளைகள் இப்படி செய்ய மாட்டார்கள். முன்பு தேவையற்ற கருத்துகளை பேசியதற்காக தளபதி சாட்டை துரைமுருகனையே நீக்கியிருக்கிறேன்” எனக் கூறினார்.
தனது உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நாணயமிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது என்றார். கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயத்திற்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
TNPSC குரூப் 3 தேர்வு 4ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து TNPSC வெளியிட்ட செய்திக் குறிப்பில், குரூப் 3 எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடந்ததாகவும், ரிசல்ட் 2023 ஆகஸ்டில் வெளியானதாகவும் கூறப்பட்டுள்ளது. பிறகு, 3 கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளதாகவும், 4ம் கட்ட சரிபார்ப்பு பிராட்வேயில் உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவரும், Ex முதல்வருமான கருணாநிதியின் நினைவு நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி உருவம் பொறித்த ₹100 நாணயத்தை அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், CM ஸ்டாலின், உதயநிதி உள்பட அனைத்து திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். WB அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவும், குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கைக்கான நேரமிது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் கட்சியில் இருந்து விலக போவதாக சூசகமாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏராளமான அவமதிப்புக்கு பிறகு, மாற்று வழித் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றிலிருந்து தனது வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அவர் BJPஇல் இணைவதாக தகவல் பரவியது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொல்கத்தாவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் ஓரிடத்தில் சேர மம்தா அரசு தடைவிதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெண் மருத்துவரின் தாயார், “என் மகளுக்காக போராட்டம் கூட நடத்தக் கூடாதா? பாலியல், கொலை சம்பவங்களைக் கண்டித்து நடக்கும் போராட்டங்களை மம்தா அரசு ஒடுக்க நினைப்பது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இந்த ஆண்டுக்கான சூப்பர் ப்ளூ மூன் நாளை வானில் தோன்றவுள்ளது. ப்ளூ மூன் என்றால், நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று அர்த்தமில்லை. நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து, பெளர்ணமி நிலவாக காட்சி அளிப்பதையே ப்ளூ மூன் என்கிறோம். சில நேரங்களில் வளிமண்டல ஒளி சிதறலால், நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதன்படி, இந்த சூப்பர் மூனை நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை இந்தியாவில் காணலாம்.
Sorry, no posts matched your criteria.