India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நித்யா மேனனுக்கு அண்மையில் தேசிய விருது வழங்கப்பட்டது. நித்யா மேனனுக்கு விருது வழங்கப்பட்டதை வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், “சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ, அதிகரிப்போ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதி தான். இதை நிரூபிக்கவே முயற்சிக்கிறேன்” எனக் கூறினார்.
*மேஷம் – வரவு அதிகரிக்கும்
*ரிஷபம் – சிக்கல் உண்டாகும்
*மிதுனம் – நோய்வாய்பட வாய்ப்பு
*கடகம் – எதிர்ப்பு மேலோங்கும்
*சிம்மம் – வெற்றி தேடி வரும்
*கன்னி – கவலை ஏற்படும்
*துலாம் – பயம் அதிகரிக்கும்
*விருச்சிகம் – நட்பு வட்டம் பெருகும்
*தனுசு – தடங்கல் ஏற்படும்
*மகரம் – தாமதம் உண்டாகும் *கும்பம் – சுகமான நாள் *மீனம் – சுபகாரியம் கைகூடும்
தேனி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் கெங்கவல்லி அருகே புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனிடையே, 12 மாவட்டங்களில் இரவு 1 மணி இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் BTS புகைப்படங்களை நடிகை நித்யா மேனன் பகிர்ந்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், ஏற்கெனவே வழங்கிய விடுமுறையை ஈடு செய்ய வேண்டியுள்ளதால், அதுபோன்ற பரிசீலனை எதுவும் இல்லை என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், விடுமுறை என்றால் முன்னதாக அறிவிக்கப்படும் என விளக்கமளித்த அவர்கள், நாளை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என கூறியுள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளியின் தாளாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். NCC Campஇல் பங்கேற்ற 17 மாணவிகளில் 13 பேருக்கு தொல்லை தந்ததாக தெரிகிறது. இதையடுத்து தாளாளர் சாம்சன், பிரின்சிபல் சதீஷ், ஆசிரியை ஜெனிஃபர், பயிற்சியாளர்கள் 4 பேர் கைதாகியுள்ள நிலையில், புகாரில் தொடர்புடைய நாம் தமிழர் Ex நிர்வாகி சிவராமனை தனிப்படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் உடலுக்கு CM ஸ்டாலின், ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினர். கடலோர காவல்படையின் புதிய கட்டடத்தை சென்னையில் இன்று ராஜ்நாத் திறந்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கவனித்துவந்த ராகேஷுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இருவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பணம், பொருளைத் தாண்டி நிறைவான வாழ்க்கைதான் மிகவும் அவசியம். அதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். *எப்போதும் பாசிடிவ் வைஃபோடு இருக்கும் மனிதர்களோடு அதிகம் பழகுங்கள். *சோகத்தை விட்டொழித்து, உற்சாகமாக இருங்கள். *உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றுங்கள். மதிப்புமிக்கவராக உணருங்கள். *உங்களை நீங்களே நேசியுங்கள். *பயணப்படுங்கள். முடிந்தால், நீண்ட நெடுந்தூரம் பயணம் செய்யுங்கள்.
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால், நெஞ்சுவலியால் உயிரிழந்தார். கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கான சென்னை வந்த ராஜ்நாத், கடலோர காவல் படையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை வந்திருந்த ராகேஷ் பால்-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட்டான நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவுக்கு, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.