news

News August 19, 2024

50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் ஒருவர் கைது

image

அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1973ஆம் ஆண்டில் நினா பிஸ்செர் என்ற பெண்மனி பலாத்காரம் செய்யப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், டிஎன்ஏ மாதிரிகளின் அடிப்படையில் மைக்கெல் (75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த போது அந்த பெண்ணுக்கு 31 வயதானதும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு உறைந்ததும் தெரியவந்துள்ளது.

News August 19, 2024

வித்தியாசமான எனர்ஜியுடன் கோலி வருவார்: ரோஹித்

image

கோலி ஒவ்வொரு முறையும் வித்தியாசமான எனர்ஜியுடன் களத்திற்கு வருவதாக ரோஹித் ஷர்மா புகழ்ந்துள்ளார். அவரிடம் உள்ள ஏராளமான அனுபவம் தடுமாற்றம், கடுமையான சூழ்நிலைகளில் தான் வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கோலி பெற்றுக் கொடுத்த வெற்றிகளை மார்கெட்டில் வாங்க முடியாது என தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 16ஆவது ஆண்டை கோலி நிறைவு செய்ததை தொடர்ந்து ரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார்.

News August 19, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 19 ▶ஆவணி – 03 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:15 AM – 07:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 09:15 AM – 10:15 AM & 07:30 PM – 08:30PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM >▶திதி: பவுர்ணமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்.

News August 19, 2024

இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தது: அமித்ஷா

image

வங்கதேசத்தில் 27% ஆக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 9% ஆக குறைந்துவிட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மீதமுள்ளவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டோ அல்லது இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைய முயற்சி செய்வதாகவோ அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய சூழலில் ஒரு அரசால் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது எனவும், இந்த மோடி அரசாங்கத்தில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

News August 19, 2024

5 ஆயிரம் செயற்கைக்கோள்கள்: மயில்சாமி

image

கொரோனா காலத்தில் 5 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ EX விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் 6-7 ஆண்டுகள் தான் எனவும், எனவே ஆயுட்காலம் ஒவ்வொன்றாக முடியும் தருவாயில், நாம் புதியவைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ராக்கெட் ஏவுவதற்கு உலகிலேயே சிறந்த குலசேகரப்பட்டினம் தான் என தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

புரூஸ் லி பொன்மொழிகள்

image

*மகிழ்ச்சியாக இருங்கள், ஆனால் ஒருபோதும் திருப்தி அடையாதீர்கள். *தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படக்கூடியவை, அவற்றை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தால். *தோல்விக்கு அஞ்சாதீர்கள். தோல்வி ஒரு குற்றமல்ல. பெரும் முயற்சிகள் தோல்வியுற்றாலும் கூட அவை போற்றத்தக்கவை. *இலகுவான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யாதீர்கள், கடினமான வாழ்க்கையை தாங்கிக்கொள்வதற்கான வலிமைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

News August 19, 2024

‘விஜய் 69’ படப்பிடிப்பு எப்போது?

image

நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அல்லது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிப்பார் என கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதை முடித்து விட்டு தீவிர அரசியலில் அவர் ஈடுபட உள்ளார்.

News August 19, 2024

கோலியை பற்றி அன்றே கணித்த கம்பீர்

image

இந்தியாவிற்காக நீண்ட காலம் விளையாடும் திறமையை கோலி பெற்றிருப்பதை, அவர் அறிமுகமானபோதே கண்டு கொண்டதாக கம்பீர் தெரிவித்துள்ளார். அறிமுக போட்டியில் வேகமாக அவுட் ஆனாலும், வலைப்பயிற்சியில் அவர் காட்டிய உழைப்பில் இருந்து இதை தெரிந்து கொண்டதாகவும், கோலி சிறப்பாக செயல்பட கொஞ்ச நேரம் தேவைப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் போட்டிகளை வென்று கொடுத்த விதம் நேர்மறையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

CAA முஸ்லிம்கள் குடியுரிமையை பறிக்காது: அமித்ஷா

image

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்காது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். இந்தியாவில் உள்ள அகதிகள் அச்சப்படாமல் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான நடைமுறை யாருடைய பணியையோ அல்லது சொத்துக்களையோ பாதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஊடுருவல்காரர்களுக்கு முந்தைய அரசு குடியுரிமை வழங்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

News August 19, 2024

ஆகஸ்ட் 19: வரலாற்றில் இன்று

image

▶உலக மனிதநேய நாள். ▶கிமு 295 – ரோமக் கடவுள் வீனசுக்கு முதலாவது ரோமக் கோவில் கட்டப்பட்டது. ▶1866 – இலங்கையில் முதல் தடவையாக தந்திச் செய்தி நியூயார்க்கில் இருந்து காலி நகரை வந்தடைந்தது. ▶1934 – ஜெர்மனியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹிட்லருக்கு ஆதரவாக 89.9% மக்கள் வாக்களித்தனர். ▶1960 – சோவியத்தின் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 விண்கலம் 2 நாய்கள், 40 சுண்டெலிகள், 2 எலிகளை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

error: Content is protected !!