India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கான பரிந்துரையின்போது PM பதவி இடம்பெறவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். ஆனால், மோடி இதனை ஏற்க மறுத்ததாகவும், PM-ம் ஒரு குடிமகன், அவருக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பிறகே இந்த மசோதாவில் PM பதவி சேர்க்கப்பட்டுள்ளது.
அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு ‘ஜனநாயகன்’தான் கடைசி திரைப்படம். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சினிமா பயணத்தின் கடைசி திரைப்படம் என்பதால், இசை வெளியீட்டு விழாவிற்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்டோரை அழைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
◆நார்ச்சத்து, புரதம், கால்சியம் நிறைந்த இந்த தோசை, உடல் எடையை குறைக்க உதவும்.
➥சாமை அரிசி & ஜவ்வரிசியை நன்றாக அரைத்து, அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகு பொடி, சீரகம், தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
➥இந்த மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கொள்ளவும்.
➥தண்ணீர் சேர்த்து இதை மாவு பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறி, உப்பு சேர்த்தால், சாமை தோசை மாவு ரெடி.
சவுதி சூப்பர் கப் ஃபைனலில் ரொனால்டோவின் அல் நசார் கிளப் அணி, அல் ஆலி சவுதி அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக சென்ற ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், அல் நாசர் அணி 3-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், இந்த கிளப் அணிக்காக ரொனால்டோ இதுவரை Major கோப்பைகளை வென்றதில்லை என்ற விமர்சனம் தொடர்கிறது.
விஜய், அஜித் இருவரும் அவர்களது ஆரம்ப காலங்களில் புதுமுக இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றி, அவர்களுக்கு வாய்ப்பளித்ததாக AR முருகதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோலவே சிவகார்த்திகேயனும் ஆரம்பத்தில் புதுமுக இயக்குநர்களுடன் கைகோர்ப்பதில் சிறந்து விளங்கியதாகவும், அதுவே அவரின் தற்போதைய வளர்ச்சிக்கு காரணம் என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். SK வளர்ச்சி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
‘அண்ணா’ பெயரில் சித்த மருத்துவ பல்கலை அமைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, 2 நாள்களுக்கு முன்பும் 3-வது முறையாக கவர்னர் திருப்பி அனுப்பியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் கேட்டுள்ள 4 திருத்தங்கள் தீர்க்கப்பட்டு, சட்டப்பேரவையில் முன்மொழியப்படும் என்றும் கூறியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், விரைவில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு தொடங்கிய பால் நிறுவனம் தற்போது ₹931 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளது. 2024-ல் உச்சபட்சமாக அவரின் பால் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ₹6,755 கோடியை எட்டியது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்டுள்ள பணக்கார முதல்வர் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் தொடரில் ஒரு வீரர் 1000 பந்துகளுக்கு மேல்(சராசரியாக 167 ஓவர்கள்) வீசுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்கு கடுமையான உடல் வலிமையையும், மனவலிமையையும் தேவைப்படும். உலகளவில் சில பந்துவீச்சாளர்கள் இதனை பலமுறை நிகழ்த்தியுள்ளார்கள். இந்தியாவிலும் சில வீரர்கள் இதனை செய்துள்ளனர். அவர்கள் யார் என்பதை மேலே கொடுத்துள்ளோம் SWIPE செய்து பார்க்கவும்.
Sorry, no posts matched your criteria.