news

News August 19, 2024

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தைகள் பலி

image

ஆந்திர மாநிலம் கைலாசப்பட்டணத்தில் ஆராதனா என்ற அறக்கட்டளையின் விடுதியில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் குழந்தைகள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வாமை ஏற்பட்ட 37 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2024

நீரஜ் 3 முறை தொடர்ந்து ஃபவுல் ஆனது ஏன்?

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில் நீரஜ் 3 முறை ஃபவுல் ஆக அவருக்கு இருந்த நெருக்கடியே காரணம் என முன்னாள் வீரர் தேவேந்திர ஜஜாரியா கூறியுள்ளார். பாக்., வீரர் நதீம் 2ஆவது முயற்சியில் 92.97 மீ தூரம் எறிந்ததால், அவரை வீழ்த்தும் நோக்கில் விளையாடியதால் நீரஜ் கடைசி 3 முறை ஃபவுல் ஆனதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போட்டியில் 89.45 மீட்டர் ஈட்டி எறிந்த நீரஜ் வெள்ளியும், நதீம் தங்கப் பதக்கமும் வென்றனர்.

News August 19, 2024

அவருக்கும் NCCக்கும் எந்த தொடர்பும் இல்லை

image

கிருஷ்ணகிரியில் எந்த NCC முகாமும் நடக்கவில்லை என NCC தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை புகாரில் தொடர்புடைய நபருக்கும் NCCக்கும் எந்த தொடர்புமில்லை எனவும் கூறியுள்ளது. போலியாக NCC முகாம் நடத்தி பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகி <<13891818>>சிவராமன்<<>> கைது செய்யப்பட்டார். தனியார் பள்ளியில் அவர் போலியாக முகாம் நடத்தியது அம்பலமாகியுள்ளது.

News August 19, 2024

பாலியல் சீண்டல்.. 1098 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்

image

கிருஷ்ணகிரி பர்கூரில், தனியார் பள்ளியில் NCC CAMPக்கு சென்ற மாணவியிடம், நாம் தமிழர் Ex நிர்வாகி அத்துமீறிய விவகாரம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் போலியாக NCC முகாம்கள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலியல் தொல்லை குறித்து 1098 என்ற எண்ணில், மாணவிகள் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 19, 2024

மூலத்தில் இருந்து குணமடைய…

image

மூல நோயால் சிலர் கடும் அவதிப்படுவர். அவர்கள் கீழ்காணும் காய்கறிகள், பழங்கள், பருப்புகளை அன்றாடம் எடுத்துக் கொண்டால் குணமடையலாம். 1) பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு 2) காய்கறிகள்: ப்ராக்கோலி, கேரட், கீரை வகைகள் 3) முழு தானியங்கள்: ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், பிரவுன் அரிசி, பார்லி, உமியுள்ள தானியங்கள் 4) பருப்பு வகைகள்: பயறு, கொண்டைக் கடலை, பட்டாணி.

News August 19, 2024

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி

image

கொல்கத்தாவில் கடந்த 8ஆம் தேதி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து 8ஆவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

News August 19, 2024

சங்கி எப்படி திடீர் நண்பர்கள் ஆனார்கள்? பிரேமலதா

image

பாஜகவை எதிர்ப்பதாக கூறி திமுக இரட்டை வேடம் போடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பாஜகவை சங்கி என்று விமர்சிக்கும் திமுக, தனக்கு தேவைப்படும் போது மட்டும் அரவணைத்து கொள்வதாக குற்றம் சாட்டினார். மக்களின் நலனை புறக்கணித்து, தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திமுக தனது நிலைபாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும் அவர் சாடினார்.

News August 19, 2024

யுவனை விசாரிக்க காவல்துறை திட்டம்

image

யுவன் சங்கர் ராஜா வாடகை விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரிடம் விளக்கம் கேட்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் ஜமீலா என்பவரின் வீட்டை யுவன் வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், ₹20 லட்சம் வாடகை பாக்கி தராமல் இரவோடு இரவாக காலி செய்ததாக ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் புகார் அளித்திருந்தார்.

News August 19, 2024

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்

image

கிருஷ்ணகிரியில் NCC கேம்பில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கைது செய்யப்பட்ட முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் போலி NCC மாஸ்டர் என்பதும், அந்த தனியார் பள்ளியில் நடந்தது போலியான கேம்ப் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே, அவர் இதே போன்று சூளகிரியில் உள்ள 3 பள்ளிகளிலும் போலி NCC கேம்ப் நடத்தியது அம்பலமாகியுள்ளது.

News August 19, 2024

இந்திய மசாலாப் பொருட்களின் மாதிரிகளில் 12% தரமற்றவை!

image

இந்திய மசாலாப் பொருட்களின் மாதிரிகளில் 12% தரமற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூலையில் இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட 4,054 இல் 474 மாதிரிகளின் தரம் & பாதுகாப்பு அளவீடுகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக FSSAI கண்டறிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. MDH & எவரெஸ்ட் பிராண்டுகளின் தயாரிப்புகள் நுகர்வுக்கு தகுந்தவையல்ல எனக் கூறி நியூசி., அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

error: Content is protected !!