India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்ற தலைப்பில், அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் நாளை மறுநாள் கலைத் திருவிழா தொடங்குகிறது. 1 முதல் +2 வரை, மாணவர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், நடனம், பேச்சு, கட்டுரை என பல வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆக.30 வரை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான அவகாசம் நாளை முடிவடைகிறது. மாணவர்களே நீங்கள் எந்த போட்டியில் பங்கேற்கிறீர்கள்?
ஐபிஎல்லில் ஒருமுறை கோப்பையை வென்ற பின் அடுத்த கோப்பைக்காக அதிக நாள்கள் காத்திருக்கும் அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படைத்துள்ளது. 2008ல் நடைபெற்ற முதல் IPL தொடரை கைப்பற்றிய RR தற்போது வரை 5,924 நாள்களாக அடுத்த கோப்பைக்கு காத்திருக்கின்றனர். SRH 3,005 நாள்கள், MI 1,379 நாள்கள், GT 814 நாள்கள், CSK 451, KKR 86 நாள்களாக அடுத்த கோப்பைக்காக காத்திருக்கின்றனர்.
பாஜக தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அரசியலில் பங்காளிகளாக செயல்படும் திமுக, அதிமுகவுடன் பாஜக ஒருபோதும் இணையாது என்றும் அவர் உறுதிபட கூறினார். விஜய் உடன் எதிர்காலத்தில் பாஜக கூட்டணி அமைக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய்யும் எங்களுக்கு மாமன், மச்சான் உறவுதான் என்றார்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாளை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கங்குலி தெரிவித்துள்ளார். மாணவி வன்கொடுமைக்கு எதிராக நாடும் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் தனது மனைவி நடத்தும் நடனப் பள்ளியில் நடக்கும் போராட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார். முன்னதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தின் DP-ஐ கருப்பாக மாற்றியிருந்தார்.
தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாத பாஜகவுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடனான திமுகவின் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்ற கூறிய அவர், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அனைவரிடம் அன்பாக பழகும் முதல்வர் ஸ்டாலின், உரிமைக்காக கலைஞர் போல் போராடக் கூடியவர் என்றும் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம். இதை யாரும் தடுக்க கூடாது. இதை மீறினால், உரிய தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபையில் பக்தர்கள் தரிக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.
கட்சி கொடியேற்ற அனுமதி கேட்டு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி இருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக. 22ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் 5,000 தொண்டர்கள் மத்தியில், கட்சி கொடியை ஏற்றி, முதல் அரசியல் உரையாற்ற விஜய் திட்டமிட்டிருந்தார். இவ்விழாவிற்கு பாதுகாப்பு கோரி அவர் கடிதம் அளித்திருந்த நிலையில், போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
துக்ளக் நிறுவனரும், மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி மறைவுக்கு, CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், செளந்தரா ராமசாமியின் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
சுயதொழிலை ஊக்குவிக்க ‘முத்ரா’ கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதில் நடக்கும் மோசடிகளை தடுக்க, விரைவில் e-KYC முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கடன் பெறுவோரின் தகுதியை எளிதில் மதிப்பிட்டு, தகுதியான நபர்களுக்கு கடன் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக ‘இம்பேக்ட் அசெஸ்மென்ட் ஆஃப் PM முத்ரா யோஜனா’ என்ற பெயரில் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, குமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.