India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகாவில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணிக்குழுவை அமைத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார். பெண் மருத்துவர்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சூழலில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா கூறியுள்ளார். உலகளாவிய சுகாதார அவசர நிலையை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் முயற்சியாக தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஓராண்டுக்குள் இது தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
உ.பி, ம.பி, பெங்களூரு, பஞ்சாப், தமிழ்நாடு என கடந்த 2 நாள்களாக அடுத்தடுத்து பெண்கள், குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் செய்திகளால் மகள்களை பெற்றவர்கள் அதீத அச்சத்தில் உள்ளனர். பெண் குழந்தைகளை பாதுகாப்பாக இருக்க சொல்லும் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு காமம் பற்றிய புரிதல், பாலின சமத்துவம், காதல் மறுப்பை ஏற்று கொள்ளும் பக்குவத்தை ஏன் சொல்லிக் கொடுப்பதில்லை என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
▶1888 – முதலாவது கால்குலேட்டர் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ▶1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிஸின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. ▶1957 – சோவியத் ரஷ்யா ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. ▶1988 – நேபாள-இந்திய எல்லைப்பகுதியில் 6.9 ரிக்டர் என்ற அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,450 பேர் வரை உயிரிழந்தனர்.
மாதவிடாய் குறித்து பெண்கள் பொதுவெளியில் பேச தயங்குகிறார்கள், அது ஒன்றும் அபிஷ்டு இல்லை என நடிகை அக்சரா ஹாசன் தெரிவித்துள்ளார். பீரியட்ஸ் ஒரு இயற்கையான விஷயம் எனவும், இதன் மூலமாகத்தான் ஒரு உயிர் இந்த உலகத்திற்கு வருகிறது என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், இதை தீட்டு என சொல்லும்போது, பார்ப்பவர்களின் பார்வை தான் தவறாக உள்ளது என்றும், இது குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கோலியை கிங் என்று அழைத்தால் அவரே மோசமாக உணர்வார் என பாக். முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். கோலியே தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று கூறுவார் என்றும், இங்கு கிரிக்கெட்டை விட யாரும் பெரியவர் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், டான் பிராட்மேன், சச்சின் கூட தங்களை கிங் என்று சொன்னதில்லை எனவும், கோலி தற்சமயம் மகத்தான பேட்ஸ்மேன் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும் கூறியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: நீத்தார் பெருமை ▶குறள் எண்: 29 ▶குறள்: குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. ▶பொருள்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித்திறனுக்கும், வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் திறனுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளதாக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான தரவரிசையில் பல சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில் இருந்தாலும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை எனவும், உலகச் சந்தையில் தமிழகத்தால் முழுத் திறனை அடைய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Zomato-வில் குழு ஆர்டர்களுக்காக புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆர்டரில் பலர் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்ய முடியும். பயனாளர் ஒரு லிங்கை உருவாக்கி தன்னுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு பிடித்த உணவுகளை அந்த லிங்க் உடன் தொடர்புடைய கார்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய், சம்பவம் நடந்த ஆக.8 அன்று கொலை செய்வதற்கு முன்னதாக சோனாகச்சியில் உள்ள விபச்சார விடுதிகளுக்கு 2 முறை சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் மது அருந்திவிட்டு முழு போதையில் பெண் மருத்துவர் தூங்க சென்ற அறைக்குள் நுழைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.