India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
மதுரை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி, “கள்ளச்சாராய மரணத்துக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் உங்களால், சிறுமியின் குடும்பத்திற்கு கொடுக்க பணம் இல்லையா?” எனக் கேள்வியெழுப்பினார். மேலும், அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த கமல்ஹாசன், நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அத்துடன், அப்படத்தின் இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை வாழ்த்தி, மடலொன்றையும் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற அப்படத்தைக் காண, தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
நாளை கட்சிக்கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, தவெக தலைவர் விஜய் சார்பில், காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக அறிக்கைகளில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகம் இடம்பெறும். அதை மையமாக வைத்து புதிய லோகோ தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, வெற்றியை குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
வாழை திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்ட திரையுலக பிரபலங்கள், அப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜை மனந்திறந்து பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். வாழையை திரையில் பார்த்து மெய் சிலிர்த்ததாகக் கூறிய அவர், மாரி செல்வராஜ் & அவரது படைப்புகள் மீதான மரியாதை 1,000 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
செய்திகளை ஆப்ஸ், வெப் போன்ற டிஜிட்டல் வடிவ வெளியீடுகளில் படிக்கவே மக்கள் அதிகம் விரும்புவதாக, Humanify ஆய்வில் தெரியவந்துள்ளது. வாசகர்களில் 84% பேர் டிஜிட்டல் பிளாட்பார்ம்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உள்ளங்கைக்குள் அடங்கும் ஃபோனில், தகவலைப் பெற முடிவதே இதற்கு காரணமென எனவும் அவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், நம்பகத்தன்மைக்கு பாரம்பரிய ஊடகங்களையே அவர்கள் நாடுவதாக தெரியவந்துள்ளது.
வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. வீட்டு இணைப்பு ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும், 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது. இந்நிலையில், வருவாயை பெருக்கும் நோக்கில், இரு மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, 100 யூனிட் கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
குரங்கு காய்ச்சலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது என்றார். சென்னை ராஜீவ்காந்தி ஹாஸ்பிடலில் 10 படுக்கை கொண்ட வார்டு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Netflix OTT தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ பெற்றுள்ளது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி ₹100 கோடி கிளப்பில் இணைந்த இப்படம் Netflixஇல் 18.6M வியூஸைக் கடந்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, க்ரூ (17.9M) & லாப்டா லேடீஸ் (17.1M) ஆகிய இரு படங்கள் 2 & 3ஆம் இடத்தைத் தக்கவைத்துள்ளன.
சிறு வியாபாரிகள் GST வரி செலுத்துகிறார்களா என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதால், சிறு வியாபாரிகள் GST வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். ஆதலால், G Pay, Phone pay உள்ளிட்ட ஆன்லைன் பேமண்ட் நிறுவனங்களுடன் சேர்ந்து இதனை, சரக்கு, சேவை வரி இயக்குநரகம் கண்காணித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.