India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருகாலத்தில், அரிதிலும் அரிதாக இருந்த அல்சர் இன்றைக்கு 20 பேரில் ஒருவருக்கு என வரத் தொடங்கிவிட்டது. அவர்களுக்குதான் இந்த சூப்பர் டிப்ஸ். 2 ஸ்பூன் கசகசாவை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதை அரைத்து, காய்ச்சாத பசும்பாலில் கலக்கி குடிக்க வேண்டும். வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால் 2 மாதங்களில் முற்றிலுமாக அல்சர் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியொன்று உதயமாகவுள்ளது. மறைந்த பிரதமர் வாஜ்பாயின் அரசியல் பாதையில் பயணிக்கும் வகையில், Ex மினிஸ்டர் யஷ்வந்த் சின்ஹா, ‘அடல் விசார் மஞ்ச்’ என்ற கட்சியை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். மூத்த அரசியல் தலைவரான அவர், JD(1988–91), BJP(1992–2018), BSLP(2020-21) & TMC(2021-22) ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
ஆதார் அட்டையில் இலவசமாக புதுப்பிக்க, செப்.14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெயர், முகவரி, புகைப்படம் மாற்றம் போன்ற பணிகளை செய்யலாம். மாற்றம் செய்ய உள்ளவர்கள், ஓட்டர் ஐடி, லைசென்ஸ் போன்ற ஆவணங்களுடன், அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். <
காஷ்மீரில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். பல விஷயங்கள் குறித்து அவரிடம் மாணவிகள் சுவாரஸ்யமாக கேள்வியெழுப்பினர். அப்போது, “உங்களுக்கு எப்போது திருமணம்?” என ஒரு மாணவி கேட்டார். இந்தக் கேள்வியை கேட்டதும் புன்னகைத்த ராகுல், “கடந்த 30 வருடங்களாக இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறேன். இது கடும் மன உளைச்சலை தருகிறது. திருமணம் பற்றி எந்த திட்டமிடலும் இல்லை” என்றார்.
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கூகுள் CEO சுந்தர் பிச்சை இணைந்திருப்பதே அவரது வெற்றிக்கு ஒரு சிறந்த உதாரணம். மதுரையில் பிறந்து சென்னையில் பள்ளி படிப்பும், கோரக்பூர் ஐஐடியில் பட்டமும் படித்தார். 2004ல் கூகுளில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்து ஜிமெயில், கூகுள் மேப்ஸ் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார். உலகின் நம்பர் 1 தேடல் தளமாக கூகுள் குரோமை கட்டமைத்ததில் சுந்தரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவுடன் இணைத்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும், QUAD உள்ளிட்ட பிராந்திய அமைப்புகளில் இருநாட்டு கூட்டணியை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
*சூடான்: அர்பாத் அணை உடைந்ததால் அருகில் இருந்த வீடுகள் நீருக்குள் மூழ்கி சுமார் 60 பேர் உயிரிழந்தனர். *உக்ரைன்: மின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய பெரும் தாக்குதலால் உக்ரைன் இருளில் மூழ்கியது. *இஸ்ரேல்: இஸ்ரேல் அரசு & ஹமாஸ் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் முடிந்தது. *சிங்கப்பூர்: உற்பத்திமுறை சார்ந்த துறைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் விருப்பம்.
உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை காலமானார். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கிடைத்த வாய்ப்புகளை குடிப்பழக்கத்தால் இழந்து வந்த இவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் தான், விஜய் கட்சியை தொடங்கியதாக பாஜக மூத்த தலைவர் விஜயதாரணி கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ராகுலை விஜய் எப்போது சந்தித்தார்? அது நடந்து 10 வருடத்துக்கு மேல் இருக்கும். காங்கிரஸில் விஜய் பொறுப்பு கேட்டாரா என்று எனக்கு தெரியாது. வேண்டுமானால் ராகுலிடம் கேட்டு சொல்கிறேன்” எனக் கூறினார்.
நவீன தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அழுத்தமாக கூறியவர்களில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் முக்கியமானவர். இவரது ‘குறத்தி முடுக்கு’, ‘நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய 2 நாவல்களும் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாக உள்ளது. இவரது கதைகளை போலவே, இவரது வாழ்வும் கசப்பான முடிவையே கொண்டுள்ளது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயல் இழந்து துணைக்கு ஆளே இல்லாமல் அநாதையாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.