news

News August 23, 2024

நிலவில் நடக்கும் இந்தியாவின் ஆட்சி! இன்றைய ஸ்பெஷல்

image

சோற்றுக்கே வழி இல்லாதவர்கள் என இந்தியாவை கிண்டலடித்த மேற்கத்திய நாடுகள், நம்மை சாஷ்டாங்கமாக வணங்கிய நாள் இன்று. கடந்த ஆண்டு இதே நாளில்தான், சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இந்தியா தரையிறக்கியது. நிலவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா சென்றிருந்தாலும், அதன் தென் துருவத்திற்கு யாராலும் செல்ல முடியவில்லை. சூரிய ஒளிபடாமல் இருளின் ஆட்சி நடந்த அங்கு, சந்திராயன் 3 ஒளிபாய்ச்சிய தினம் இன்று.

News August 23, 2024

முன்னாள் கல்லூரி முதல்வரிடம் பாலிகிராப் சோதனை

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், RG கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் CBI உண்மை கண்டறியும் சோதனை நடத்தவுள்ளது. CBI தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சந்தீப் கோஷ் உள்ளிட்ட 5 பேரிடம் இந்த சோதனையை நடத்த அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, அவர்களிடம் CFSL நிபுணர்கள் பாலிகிராப் சோதனை மேற்கொள்ளவுள்ளனர்.

News August 23, 2024

சென்னை மாநகராட்சியில் வேலை பார்க்க ஆசையா?

image

சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் 150 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரி (30 இடங்கள்), செவிலியர் (32), ஹெல்த் இன்ஸ்பெக்டர் (12), உதவிப்பணியாளர் (66), சைக்காலஜிஸ்ட் (5), சைக்யாரிஸ்ட் சமூகப்பணியாளர் (5) பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளோர் நேரிலோ (அ) தபாலிலோ செப். 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 23, 2024

ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் எண் கட்டாயம்

image

ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், <>eservices<<>> தளம் செயல்பாட்டில் உள்ளது. இதிலிருந்து இலவசமாக பெறும் ஆவணங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பட்டா, சிட்டா, பட்டா நகல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கும் வருகிறது.

News August 23, 2024

23/23-நிலவை இந்தியா தொட்ட தினம்

image

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக 2023 ஆக. 23இல் தரையிறக்கி வரலாறு படைத்தது. இந்நாள், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மோடி அறிவித்திருந்தார். அதன்படி, ஆக. 23 இன்று இந்தியா முதல் விண்வெளி தினத்தைக் காெண்டாடுகிறது. உலகத்தையே இந்தியா திரும்பி பார்க்க வைத்த இந்நாளை நாமும் கொண்டாடுவோம். இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. SHARE IT

News August 23, 2024

நாய்கள் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?

image

நாய்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் இயங்குகிறது. பயப்படுபவர்களையே அவைகள் அதிகம் துரத்தும். எனவே பயத்தைக் காட்டவே கூடாது, ஓடாமல் நின்றாலே அருகில் வந்து குரைத்து விட்டு சென்றுவிடும். நாய்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது. அது சண்டைக்கு அழைப்பது போல் ஆகிவிடும். கீழே கல்லோ அல்லது வேறு பொருள்களோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் குனிந்து எடுத்து எறிவது போல் பாவனை காட்டினால் ஓடிவிடும்.

News August 23, 2024

பாலை A1, A2 லேபில் ஒட்டி விற்பதா.. FSSAI அதிரடி

image

பாலில் A1, A2 என ஒட்டப்படும் லேபில்களை நீக்கும்படி உணவுப் பொருள் விற்பனை நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற லேபில்கள், மக்களை தவறாக வழிநடத்த வாய்ப்புள்ளது என்றும், இது 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்திற்கு எதிரானது என்றும் FSSAI கூறியுள்ளது. புரோட்டீன் அதிகம் உள்ள பால் என வகைப்படுத்தி, அதில் A1, A2 ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

News August 23, 2024

வினாடி-வினா போட்டி நடத்தும் RBI

image

இந்திய அளவில் கல்லூரி மாணவர்கள் இடையே வினாடி-வினா போட்டிகள் நடத்த RBI திட்டமிட்டுள்ளது. வங்கியின் 90 ஆண்டுகால செயல்பாடுகளை நினைவுகூரும் வகையில், இளங்கலை பயின்று வரும் மாணவர்களுக்காக இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்காக ‘RBI90Quiz’ என்ற ஆன்லைன் தளத்தை RBI அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய & மாநில அளவிலான போட்டிகளில் வெல்பவர்களுக்கு ₹40 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

News August 23, 2024

FLASH: சிவராமனின் தந்தையும் மரணமடைந்தார்

image

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதாகி உயிரிழந்த <<13920478>>சிவராமனின்<<>> தந்தையும் மரணமடைந்தார். நள்ளிரவு குடிபோதையில் வாகனத்தில் சென்ற அசோக்குமார்(61), கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இருவரின் உடல்களையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தந்தை, மகன் இறப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

News August 23, 2024

வந்த முதலீடு எவ்வளவு? வெள்ளை அறிக்கை கேட்ட PMK

image

தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட, அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ₹9.74 லட்சம் கோடி அளவிற்கு தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக திமுக அரசு கூறுவதாக தெரிவித்துள்ள அவர், அதன் தற்போதைய நிலை என்ன? எனவும் வினவியுள்ளார். எவ்வளவு முதலீடு வந்துள்ளது? இன்னும் எவ்வளவு வர வேண்டியுள்ளது? என்பது குறித்து அறிக்கை வெளியிடவும் அன்புமணி கோரியுள்ளார்.

error: Content is protected !!