news

News August 24, 2024

சர்வதேசப் போட்டிகளில் தவானின் பங்களிப்பு!

image

கிரிக்கெட் ரசிகர்களால் ‘கப்பர்’ என்று அழைக்கப்படும் ஷிகர் தவான் சர்வதேச & உள்நாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச அளவிலான 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ரன்கள் (7 சதம், 5 அரைசதம்), 167 ODI போட்டிகளில் 6,793 ரன்கள் (17 சதம், 39 அரைசதம்), 68 டி20 போட்டிகளில் 1,759 ரன்கள் (11 அரைசதம்) என மொத்தம் 10,867 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளார்.

News August 24, 2024

விஜய்க்காக அண்ணன் நான் இருக்கிறேன்: சீமான்

image

என்னை குறித்து பேசி சோர்ந்து போனவர்கள் தற்போது தம்பி விஜய்யை விமர்சனம் செய்து வருவதாக சீமான் குற்றஞ்சாட்டினார். தனக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இல்லை என்று வேதனை தெரிவித்த அவர், விஜய்க்காக பேச தான் இருப்பதாக ஆதரவு குரல் கொடுத்தார். கூட்டணி குறித்த நிருபர்களின் கேள்விக்கு, தானே அனைத்தையும் கூற முடியாது, செப்.22க்கு பிறகு விஜய் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்றும் சஸ்பென்ஸ் வைத்தார்.

News August 24, 2024

கணவருடன் விவாகரத்தா? பாவனா பதில்

image

கணவர் நவீனை விவாகரத்து செய்ததாக வெளியான தகவலை பாவனா மறுத்துள்ளார். சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனா, நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருடன் இருக்கும் படங்களை சமூகவலைதளத்தில் பகிராததை சுட்டிக்காட்டி விவாகரத்து பெற்றதாக தகவல் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள பாவனா, கணவருடன் இருக்கும் படத்தை வெளியிடாததால் விவாகரத்து ஆகி விடாது எனக் கூறியுள்ளார்.

News August 24, 2024

IPL: ரோஹித் ஷர்மாவுக்கு ₹50 கோடி?

image

MI அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மாவை ஏலத்தில் எடுக்க, DC & LSG ஆகிய இரு அணிகள் போட்டிப் போட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. MI அணியைவிட்டு அவர் வெளியேறினால், ₹50 கோடி கொடுத்தாவது ஏலத்தில் எடுக்க இரு அணிகளின் உரிமையாளர்களும் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை IPL கோப்பையை வெல்லவில்லை. ரோஹித்தை அணிக்கு கொண்டுவந்தால் வெற்றிவாகை சூடலாம் என அவர்கள் எண்ணுகின்றனர்.

News August 24, 2024

அரியர் தேர்வெழுத ஓர் அறிய வாய்ப்பு நண்பர்களே!

image

அரியர் வைத்த அண்ணா பல்கலை. மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படிப்பு முடிந்த 3 ஆண்டுகளில் அரியர் முடிக்காதவர்களின் டிகிரி ரத்தாகும் நிலை உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி, 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களும் தற்போது தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆக.30-செப்.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அரியர் முடிக்காத உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 24, 2024

செயலி மூலம் மின்சார கணக்கெடுப்பு விரைவில் அமல்

image

செல்போன் செயலி மூலம் மின்பயன்பாடு கணக்கெடுக்கும் பணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. தற்போது எச்.எச்.சி. எனும் கையடக்க கணினி வாயிலாக கணக்கெடுக்கப்படுகிறது. இதற்குப் பதில் புதிய செயலியை EB உருவாக்கியுள்ளது. இதை தற்போது சோதித்து வருகிறது. விரைவில் இதனை EB அமல்படுத்தவுள்ளது. மின்கணக்கீட்டில் முறைகேட்டை தடுக்கவும், கட்டணத்தை உடனே தெரிவிக்கவும் இது உதவும் என கூறப்பட்டுள்ளது.

News August 24, 2024

தவானின் ஓய்வுக்கு என்ன காரணம்? பரபர பின்னணி

image

2010இல் ஆஸி.க்கு எதிராக அறிமுகமான தவான், ரோஹித்துடன் சேர்ந்து பல போட்டிகளில் ஓபனிங் விளையாடியுள்ளார். சச்சின்-கங்குலி ஜோடிக்கு பிறகு, இந்த ஜோடியே அதிக ரன் (5148 ரன்) குவித்துள்ளது. 2015 உலக கோப்பையில் 412, 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் 338 ரன்களை தவான் சேர்த்துள்ளார். கில்லின் விஸ்வரூபத்தால் ஓரங்கட்டப்பட்ட தவானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவே அவரின் ஓய்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

News August 24, 2024

மத்திய அரசு திட்டத்திற்கு நிதிஷ் திடீர் எதிர்ப்பு

image

சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அவர், தற்போது முஸ்லிம்கள் இதற்கு அச்சம் தெரிவிப்பதாக கூறி, நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதும், அம்மாநில மக்கள் தொகையில் 18% பேர் முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News August 24, 2024

ஆண்களை விட பெண்கள் ஆயுள் கெட்டி

image

ஆண்களை விட பெண்களின் ஆயுள்காலம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 1990-94இல் 59.4ஆகவும், பெண்கள் ஆயுள்காலம் 60.4ஆகவும் இருந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஆண்கள் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் அதிகரித்து 69.4ஆகவும், பெண்கள் ஆயுள்காலம் 12 ஆண்டுகள் அதிகரித்து 72.2ஆகவும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்க

News August 24, 2024

நேபாள பேருந்து விபத்து: பலி 41ஆக உயர்வு

image

நேபாளத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்துக்கு பேருந்தில் ஆன்மிக சுற்றுலாவாக 43 பேர் சென்றிருந்தனர். காத்மாண்டு நோக்கி பேருந்து சென்றபோது, மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நேற்று 27 பேர் பலியான நிலையில் இன்று மேலும் 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

error: Content is protected !!