India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
7.3 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோமொபைல் டீலர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விற்பனையை அதிகரிக்க பல சலுகைகளை கார் நிறுவனங்கள் அளிக்கின்றன. இருப்பினும் விற்பனை மந்தகதியில் இருப்பதால், 7.3 லட்சம் கார்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக அக்கூட்டமைப்பு கூறியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் மொத்த மதிப்பு ரூ.73,000 கோடி என்றும் தெரிவித்துள்ளது.
நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 நிவாரணமாக அறிவித்துள்ளார்.
Zerodha, Groww, Angel One போன்ற Discount ப்ரோக்கர்கள் மூலமும், ICICI Direct, HDFC Sec, SBI Caps போன்ற Fulltime ப்ரோக்கர்கள் மூலமும் ட்ரேடிங் A/C தொடங்க முடியும். இதில் Discount ப்ரோக்கர் செயலிகளில் சேவைகள் அதிகமாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். ஆதார் அட்டை, PAN கார்டு, வங்கி A/C இருந்தால் ஆன்லைனில் எளிதாக கணக்கு தொடங்க முடியும். ட்ரேடிங் A/C உடன் சேர்த்து Demat A/C கணக்கும் உருவாக்கப்படும். <<-se>>#Sharemarket<<>>
மாயாவதி குறித்து அவதூறாக பேசிய பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். மாயாவதி உ.பி-யின் ஊழல் மிகுந்த முதல்வர் என்றும், அவரை முதல்முறை முதல்வராக்கி பாஜக தவறு செய்துவிட்டதாகவும் எம்எல்ஏ ராஜேஷ் சௌத்ரி விமர்சித்திருந்தார். மாயாவதியின் கண்ணியத்தை குலைக்கும் பேச்சுக்களை ஏற்க முடியாது எனவும், பாஜக MLA மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை, தகுதியுள்ள அனைவருக்கும் விரைந்து வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை 15.94 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். ரேஷன் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை பெற முடியவில்லை.
தொடர் பண்டிகைகள் வருவதை ஒட்டி, விற்பனை கட்டணத்தை 12% வரை குறைக்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பண்டிகை கால விற்பனை ஜோராக நடைபெறுவது வழக்கம். இதை மனதில் வைத்து வணிக நிறுவனங்கள் அசத்தலான ஆஃபர்களை வழங்கும். அந்த வகையில், அமேசான் செப்.9 முதல் பல பொருட்களுக்கான விலையை கணிசமாக குறைக்கவுள்ளது. எதையெல்லாம் நீங்கள் ஆன்லைனில் வாங்குவீர்கள்… கமெண்ட் பண்ணுங்க…
மாரி செல்வராஜின் ‘வாழை’, வினோத் ராஜின் ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் நேற்று வெளியாகின. இரு படங்களுக்கும் Positive விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, ‘வாழை’ படத்தை பிரபலங்கள் ஆஹா… ஓஹோ… என பாராட்டினர். இந்நிலையில், அப்படம் முதல் நாளில் ₹1.5 கோடியும், ‘கொட்டுக்காளி’ ₹43.56 லட்சமும் வசூலித்ததாக கூறப்படுகிறது. நீங்க பார்க்க விரும்பும் படம் எதுன்னு கமெண்ட் பண்ணுங்க.
24 மணி நேரத்தில் 19.7 மில்லியன் Followers பெற்றதற்காக ரொனால்டோவுக்கு, You tube வாழ்த்து கூறியுள்ளது. ‘யுஆர் கிறிஸ்டியானோ’ என்ற பெயரில் ரொனால்டோ, சில தினங்களுக்கு முன் You tube சேனலை தொடங்கினார். தற்போது வரை அவரது பக்கத்தை 38 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதுவரை 19 வீடியோக்களை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இவரின் You tube பக்கம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<<13931696>>SGB <<>>திட்டத்தை 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் ஒரு கிராம் மதிப்புக்கு SGBஐ வாங்க முடியும். அதிகபட்சமாக 4 KG மதிப்புக்கு வாங்கலாம். இதன் சிறப்பு அம்சமே ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். மேலும், முதிர்வு காலம் வரை (8 Years) வைத்திருந்தால், LTCG வரி கிடையாது. இந்த பத்திரங்களை ஆண்டுக்கு 4 அல்லது 3 முறை அரசு வெளியிட்டு வந்தது. கடைசியாக பிப். மாதம் வெளியானது.
தங்கப் பத்திர திட்டத்திற்கு ஒரே அடியாக மூடு விழா காண மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால், அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு டாடா காட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செப். அடுத்த சீரிஸ் வெளியாகும் என காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.