news

News August 24, 2024

திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

image

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

News August 24, 2024

இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறீர்களா?

image

*வழக்கமான உறக்க நேரத்தை கடைபிடியுங்கள். *வெதுவெதுப்பான நீரில் குளித்து விட்டு, சிறிது நேரம் தியானம் செய்யலாம். *கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம். *தூங்க செல்வதற்கு முன் டீ, காபி குடிக்க வேண்டாம். *சிலருக்கு அவர்களது எண்ண ஓட்டம் தூக்க விடாமல் செய்யலாம். அவர்கள் டைரி எழுத முயலலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். Share it.

News August 24, 2024

‘2K லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பு 38 நாள்களில் முடிந்தது

image

இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் விதமாக காதல் கதையில் உருவாகிவந்த ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு 38 நாள்களில் முடிவடைந்துள்ளது. ஏற்கெனவே ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தின் மூலம் இன்றைய கால காதலை கூறி பாராட்டை பெற்ற சுசீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டதற்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிந்துள்ளதால் படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிகிறது.

News August 24, 2024

APPLY NOW: தமிழக அரசில் 861 பணியிடங்கள்

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னீசியன் அசிஸ்டென்ட், சர்வேயர் உள்ளிட்ட 861 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ITI, மூன்றாண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 18 – 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் செப்.11 வரை விண்ணப்பிக்கலாம்.

News August 24, 2024

BioE3 பாலிசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

image

BioE3 பாலிசிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், BioE3 பாலிசி உயிரி உற்பத்தியை ஊக்குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இது வரும் காலங்களில் அறிவியல், தொழில்துறை மற்றும் சமூக முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார். ஜீரோ கார்பன், இயற்கை வாழ்வியல் என்ற அடிப்படையில் இந்த பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.

News August 24, 2024

சாதி பெயர்கள் இல்லை! இனி “அரசு பள்ளிகள் தான்”

image

தமிழ்நாட்டில் விரைவில் சாதிய பெயர்கள் அகற்றப்பட்டு, அனைத்து பள்ளிகளும் “அரசுப் பள்ளிகள்” என மாற்றப்படும் என அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். மேலும், சாதிய குறியீடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியுள்ளார். ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்கள் கொண்ட பள்ளியின் பெயர்களை மாற்ற சந்துரு தலைமையிலான குழு, முதல்வருக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

News August 24, 2024

KKR அணி கேப்டனாகும் சூர்யகுமார்?

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் IPL மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், 2025 முதல் அணியை, SKY வழிநடத்த வேண்டும் என KKR அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய T20 அணியின் கேப்டனாக SKY உள்ளதால் KKR நிர்வாகம் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், ஷ்ரேயஸ் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News August 24, 2024

ரஜினியின் பேச்சால் வியந்து போனேன்: எம்பி பாராட்டு

image

‘கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசியது எல்லோரது மனதையும் தொட்டதாக விசிக எம்பி ரவிக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதை பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினி, அரசியலுக்கு வந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

News August 24, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்களின் திட்டத்திற்கு ஒப்புதல்

image

11, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெல்லோஷிப் வழங்கும் ‘விக்யன் தாரா’ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு ₹10,579 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவன & மனித திறன் மேம்பாடு; ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; புதுமை, தொழில்நுட்ப மேம்பாடு & வரிசைப்படுத்தல் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

News August 24, 2024

மக்களுக்கு தாயாக இருந்தவர் கருணாநிதி: ஸ்டாலின்

image

தமிழக மக்களுக்கு தாயாக இருந்தவர் கருணாநிதி என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். ‘தாய்’ காவியத்தை கவிதை வடிவில் தீட்டிய கருணாநிதிக்கு, ‘கலைஞர் எனும் தாய்’ நூலின் மூலம் எ.வ.வேலு தமிழ் ஓவியம் தீட்டியுள்ளதாக பாராட்டினார். லட்சக்கணக்கான திமுக தொண்டர்களுக்கு தந்தையாகவும், தாயாகவும், தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி என்றும் அவர் புகழ்ந்துரைத்தார்.

error: Content is protected !!