news

News August 25, 2024

அரசு ஊழியர் நிதி பாதுகாப்பை UPS உறுதி செய்யும்: மோடி

image

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS), அரசு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் என PM மோடி கூறியுள்ளார். தேச வளர்ச்சிக்காக உழைப்பவர்களை எண்ணி பெருமையடைவதாக Xல் குறிப்பிட்டுள்ள அவர், ஊழியர்களின் கண்ணியம், பாதுகாப்பை UPS உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்களின் நலன், எதிர்காலம் தொடர்பான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News August 25, 2024

ஆகஸ்ட் 25: வரலாற்றில் இன்று

image

1952 – தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள்
1994 – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிறந்தநாள்
2008 – ஈழத்துக் கவிஞர் தா.இராமலிங்கம் நினைவு நாள்
2012 – காங்கிரஸ் முன்னாள் MLA லட்சுமணன் நினைவு நாள்
2012 – நிலவில் முதன்முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்.

News August 25, 2024

புயல் வேண்டாம் மழையே போதும்: ரஜினி

image

விமர்சனம் என்ற பெயரில், பிறரது மனம் நோகும்படி சிலர் நடந்து கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விமர்சனங்கள் என்பது மழை போல இருக்க வேண்டுமே தவிர, புயல் போல இருக்கக் கூடாது என அறிவுறுத்திய அவர், பிறரது மனம் கவலைப்படும்படி விமர்சிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார். ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News August 25, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட்-25 (ஆவணி 09) ▶ஞாயிறுக்கிழமை ▶நல்ல நேரம்: 07:45-08:45AM & 03.15-04.15PM ▶கெளரி நேரம்: 10:45-11:45AM & 01:30-02:30PM ▶இராகு காலம்: 04:30-06:00PM ▶எமகண்டம்: 12:00-01:30PM ▶குளிகை: 03:00-04:30PM ▶திதி: 11.12 AM வரை சஷ்டி பின்பு சப்தமி ▶நட்சத்திரம் 10.43 PM வரை பரணி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶அமிர்தாதி யோகம்: சித்த யோகம் ▶சந்திராஷ்டமம்: 10.43 PM வரை அஸ்தம் பின்பு சித்திரை.

News August 25, 2024

மத விழாக்களை நடத்துவதா அரசின் வேலை? CPM

image

மத விழாக்களை தமிழக அரசு நடத்தக் கூடாது என CPM பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதத்திலிருந்து விலகி நிற்பதே, அரசின் மதச்சார்பின்மை கோட்பாடு எனக் குறிப்பிட்ட அவர், மதத்தை பரப்புவது, பின்பற்றுவது என்றில்லாமல், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதுதான் அரசின் பணி எனக் கூறினார். முன்னதாக பழனியில் 2 நாள் நடைபெறும், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

News August 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 25, 2024

ரத்த உற்பத்தி அதிகரிக்க இந்த பழத்தை சாப்பிடுங்கள்

image

அத்திப்பழம் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக சர்க்கரை நோய், நீர் கட்டிகள், உடல் வீக்கம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த தீர்வை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டுவர உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இது அஜீரணக் கோளாறுகளை சரி செய்வதுடன், சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது என்கிறார்கள்.

News August 24, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (25.08.2024)

image

*மேஷம் – உயர்வான நாள்
*ரிஷபம் – பாராட்டு கிடைக்கும்
*மிதுனம் – நலம் உண்டாகும்
*கடகம் – தோல்வி ஏற்படும்
*சிம்மம் – நெகிழ்ச்சியான நாள்
*கன்னி – அலைச்சல் அதிகரிக்கும்
*துலாம் – பொறுமை தேவை
*விருச்சிகம் – சோதனை ஏற்படும்
*தனுசு – சினம் உண்டாகும்
*மகரம் – நிம்மதியான நாள் *கும்பம் – பகை ஏற்படும் *மீனம் – வெற்றி தேடி வரும்

News August 24, 2024

விரைவில் நக்சல் இல்லாத இந்தியா: அமித் ஷா

image

2026க்குள் நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரில் பேசிய அவர், நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில், 10 ஆண்டுகளில் 6,617 வீரர்கள் மற்றும் மக்கள் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். நக்சலைட்டுகளை ஒடுக்கும் முயற்சி இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், அவர்களிடமிருந்து நாட்டை விடுவிக்கும் திறன் அரசுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!