India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முள் நீக்கிய மீன் துண்டுகளை மஞ்சள் போட்டு சுத்தமாக அலசி, நீர் வடிய நன்றாக பிழிந்துகொள்ளவும். அவற்றின் மீது மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்த மசாலா விழுதை தடவி, ஊற வைக்கவும். கெட்டியான பதத்தில் உள்ள அதனை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான மீன் பஜ்ஜி ரெடி. இதனை மல்லி சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசியல் களம் மாறியுள்ளது. BJPன் இந்துத்துவா கொள்கை இங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் வல்லுநர்கள், இந்து விரோதக் கட்சி என BJP தொடர்ந்து அடையாளப்படுத்துவது தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என DMK அஞ்சுகிறது. எனவே, தாங்கள் இந்து எதிர்ப்பாளர்கள் அல்ல என நிரூபிப்பதற்காகவே, இம்மாநாட்டை நடத்துவதாக கூறுகின்றனர். CMன் <<13929521>>கருத்தும்<<>> அதற்கு வலுவூட்டுகிறது.
அறிமுகமான நாள்முதல் இன்று வரை எண்ணற்ற மறக்க முடியாத நினைவுகளை ஷிகர் தவான் தனக்கு அளித்துள்ளதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தவானின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவர் தனது X பக்கத்தில், “உன் லெகஸி தொடர்ந்து அணியை வழிநடத்தும் நண்பா. மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி கப்பர். ஆஃப் ஃபீல்டில் உங்கள் அடுத்த இன்னிங்ஸ் சீராக செல்ல வேண்டும்” என மனதார வாழ்த்தியுள்ளார்.
பிரபாஸ் – கமல் நடிப்பில் வெளியான ‘கல்கி’ படமானது நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. அதிக வியூஸ்களைக் கடந்த படங்களின் தரவரிசையில், இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ள இப்படமானது, வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பாக்., & கத்தாரில் முறையே 1 & 3வது இடங்களில் தொடர்கிறது. தொடர் விடுமுறை என்பதால் இன்றும் நாளையும் பார்வையாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், அவரது மகன் சண்முகபாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்ற அவர் திடீரென மயங்கி விழுந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கு பிறகும் மாரி செல்வராஜின் படங்கள் பேசப்படும் என்று திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பாராட்டியுள்ளார். தனியார் டிவி சார்பில் 2024ம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான மகுடம் விருது மாரி செல்வராஜூக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை விசிக தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து மிஷ்கின் வழங்கினார். அப்போது பேசிய மிஷ்கின், அவரின் வாழ்வில் கண்ட வலிகளையே மாரி செல்வராஜ் படமாக்குவதாக புகழ்ந்தார்.
ஓட்டு போடுவதற்கு பணம் வாங்குவதுதான் பெரிய பிரச்னை என்று டிடிவி தினகரன் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ஏழைகளின் வாக்குகளை கவர பல கட்சிகள் பணம் கொடுக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுத்தவன், பதவிக்கு வந்ததும் செலவிட்ட பணத்தை எடுக்க, மக்கள் வரிப்பணத்தை தான் கொள்ளையடிக்கிறான். இப்படி ஓட்டுக்கு பணம் வாங்குவதால் தான், லஞ்சத்தை உங்களால் தட்டிக் கேட்க முடியவில்லை.” எனக் கூறினார்.
இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் & ஒலிம்பிக்ஸ் பதக்க மங்கை மனு பாக்கர் சகோதர வாஞ்சையோடு இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில், பேட்டிங் செய்வது போல மனுவும், துப்பாக்கி சுடுவது போல அவரும் வேடிக்கையாக சைகை செய்கின்றனர். அந்தப் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, லைக்ஸ்களை அள்ளியுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் இந்த உருவச்சிலையை திறந்து வைத்தார். இவ்விழாவில் அவரது மகன்கள், கட்சி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். கமல், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1. தேசிய விண்வெளி தினம் எப்போது?
2. போலந்தில் இருந்து உக்ரைனுக்கு மோடி சென்ற அதிநவீன ரயிலின் பெயர் என்ன?
3. கடலில் சுனாமி பயணிக்கும் வேகம் எந்த வாகனத்தின் வேகத்திற்கு இணையானது?
4. ஒரு கிரகத்தில் பெருங்கடல் அளவு தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது எந்த கிரகம்?
விடைகளை கமெண்ட் பண்ணுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
Sorry, no posts matched your criteria.