news

News August 26, 2024

பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைப்பு: பினராயி

image

கேரளாவில் நடிகைகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஸ்ப்ரஜன் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், 4 மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக, சமீபத்தில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

News August 26, 2024

விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்த கங்கனா

image

விவசாயிகள் போராட்டத்தின் போது பாலியல் மற்றும் கொலை குற்றங்கள் நடந்ததாக கங்கனா ரனாவத் குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை, வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் என விமர்சித்தார். கங்கனாவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் வலியுறுத்தியுள்ளது.

News August 25, 2024

அடுத்த மாதம் களம் இறங்குகிறது ஐபோன் 16?

image

ஐபோன் 16 சீரிஸ் செப்.10ஆம் தேதி அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல AI தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், முந்தைய மாடலை விட பெரிய வித்தியாசம் இருக்காது எனக் கூறப்படுகிறது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்கள் இந்த சீரிஸில் வெளியாகலாம். மேலும், பழைய சீரிஸ் போன்களின் விலை குறையவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News August 25, 2024

அவ்வளவு பயமோ? சீமானுக்கு எஸ்பி பதிலடி

image

எஸ்பி வருண்குமார் – சீமான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. “வீரம் இருந்தால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் மோத முடியுமா?” என சீமான் சவால் விடுத்தார். இதற்கு வருண்குமார், பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என பதிலடி கொடுத்தார்.

News August 25, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (26.08.2024)

image

*மேஷம் – நன்மை ஏற்படும் *ரிஷபம் – பாசம் உண்டாகும் *மிதுனம் – உடல் அசதியாக இருக்கும் *கடகம் – வீண் செலவு உண்டாகும் *சிம்மம் – புதிய நட்பு கிடைக்கும் *கன்னி – கவனத்துடன் செயல்பட வேண்டும் *துலாம் – பயணம் மேற்கொள்வீர் *விருச்சிகம் – பெருமையான நாளாக அமையும் *தனுசு – புதிய சிந்தனை உருவாகும் *மகரம் – முயற்சி கைகூடும் *கும்பம் – ஆதரவு கிடைக்கும் *மீனம் – நல்ல காரியத்திற்கு செலவு ஏற்படும்.

News August 25, 2024

தனுஷ் படத்தில் Cameoவாக பிரியங்கா மோகன்

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இயக்கும் இப்படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” விரைவில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் புது போஸ்டரை வெளியிட்டுள்ள தனுஷ், Cameoவாக நடித்ததற்காக பிரியங்கா மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்திற்கு GVP இசையமைத்துள்ளார்.

News August 25, 2024

அனைத்து தொகுதிகளிலும் போட்டி: பிரசாந்த் கிஷோர்

image

பிஹார் தேர்தலில் 243 தொகுதிகளில் ஜன் ஸ்வராஜ் கட்சி போட்டியிடும் என அக்கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். 2025இல் பிஹாரில் ஆட்சி அமைத்தால், தொழிலாளர்கள் 10 ஆயிரம் சம்பளத்திற்கு பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்றும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிஹாரின் தலையெழுத்தை அடுத்த ஆண்டு மாற்றுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

News August 25, 2024

‘கங்குவா’ ரிலீஸ் ஒத்திவைப்பு?

image

‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. அக்., 10இல் ‘கங்குவா’ வெளியாக இருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாவதால், இந்த படத்தை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

News August 25, 2024

நேற்று பெரியார்; இன்று முருகனா? : தமிழிசை

image

பெரியார் என்று கூறியவர்கள் இன்று கடவுள் முருகனை அழைக்கிறார்கள் என தமிழிசை, திமுகவை விமர்சித்துள்ளார். ஆன்மிகத்தை பற்றி பேசாதவர்கள், சனாதனத்தை பற்றி பேசியவர்கள் தற்போது முருகனுக்கு மாநாடு நடத்துவது, பாஜகவின் வெற்றி எனக் குறிப்பிட்டார். பாஜக முருகனுக்கு வேல் யாத்திரை நடத்திய போது விமர்சித்த திமுக, தற்போது முருகனுக்கு மாநாடு நடத்துவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

News August 25, 2024

நாளை துளசி இலைகளை பறிக்காதீர்

image

நாளை துளசி இலைகளை பறிக்க வேண்டாம். கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஜன்மாஷ்டமி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. ஏனென்றால் துளசி விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது. மேலும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் நாளை விரதம் இருந்து, கிருஷ்ணரை வழிபட்டால், அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கிருஷ்ணரே வீட்டில் குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!