India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் கட்சியின் மாநாட்டுக்கு தன்னை அழைக்க மாட்டார், அழைக்கவும் கூடாது என சீமான் கூறியுள்ளார். நாதக எப்போதும் தனித்து போட்டியிட தான் முடிவெடுத்துள்ளதாக திட்டவட்டமாகக் கூறிய அவர், தேர்தல் காலத்தில் தம்பிகள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்து யோசிக்கலாம் என்றார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு செய்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது T20 போட்டியில், மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய WI, 179/6 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SA, 19.4 ஓவர்களில் SA 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. ஆக.24இல் நடந்த முதல் போட்டியில் வென்ற WI, 2ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று T20 தொடரை கைப்பற்றியது. 3ஆவது போட்டி ஆக.28இல் நடக்கிறது.
அரசுப் பள்ளிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணி குறித்த விவரங்களை சமர்பிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி கட்டடங்கள் 100% உறுதியுடன் உள்ளதா என்பதை ஆராய்வதுடன், பராமரிப்புப் பணி தேவைப்படும் வகுப்பறை, கட்டடங்களின் விவரங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலை 2 வாரத்தில் அனுப்பவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, CM ஸ்டாலின் நாளை USA செல்கிறார். நாளை இரவு சென்னையிலிருந்து புறப்படும் அவர், அங்கு 17 நாள்கள் USAவில் தங்குகிறார். ஆக.28இல் San Franciscoவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அவர், ஆக.31இல் புலம்பெயர் தமிழர்களுடன் உரையாடுகிறார். செப்.2-12 வரை சிகாகோவில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கும் அவர், செப்.12இல் அங்கிருந்து தமிழகம் திரும்புகிறார்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட, பகவான் பூலோகத்தில் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் பக்தர்கள் மகிழ்வர். இன்று உங்கள் குழந்தைக்கு வேடமிட்டு எடுக்கும் Photoக்களை way2tamilusers@way2news.com என்ற இ-மெயில் முகவரிக்கு இன்று மதியம் 3 மணிக்குள் அனுப்புங்கள்.
ரேஷன் பொருள் தட்டுப்பாடு பிரச்னைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் எனக்கூறிய அவர், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடையின்றி பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். கடந்த 3 மாதங்களாக ரேஷனில் பருப்பு, பாமாயில் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற குறிக்கோளுடன், அனைவரும் வாழ வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் EPS தெரிவித்துள்ளார். இதேபோல, Ex CM ஓபிஎஸ், AMMK டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்டோரும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அன்னை தெரசாவுக்கு இன்று 114வது பிறந்தநாள். மனிதரில் புனிதர் எனப் போற்றப்படும் அவர், அல்பேனியாவில் பிறந்தாலும் 1929இல் இந்தியாவுக்கு வந்த பிறகு ‘இந்தியாதான் இனி என் தாய்நாடு’ என முடிவெடுத்தார். தொடர்ந்து ஏழை, எளியோர், தொழுநோயாளிகளுக்கு உதவிய அவர், 1955இல் ‘காந்தி பிரேம் நிவாஸ்’ பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையை தொடங்கினார். அவர் மறைந்தாலும், அவரது சேவைகள் என்றும் நீங்கா நினைவில் இருக்கும்.
உலகளவில் மிகப்பெரிய பசுமை ரயில்வே நெட்வொர்க்காக, இந்திய ரயில்வே மாறியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் சரண்மாத்தூர் கூறும்போது, நாட்டிலுள்ள 68,000 KM ரயில் பாதைகளில் 95% மின்சாரமயமாகியுள்ளது என்றார். இதன்மூலம் இந்திய ,ரயில்வே மிகப்பெரிய பசுமை ரயில்வே நெட்வொர்க் ஆகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பங்கள் மூலம் ரயில் விபத்துகளை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
*சூரியன் – ஞாயிறு, பகலவன், கதிரவன், ஆதவன், பரிதி, அருக்கன், வெய்யோன்
*பூமி – உலகம், புவி, பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்
*வானம் – ஆகாயம், வான், விசும்பு, விண்ணகம்
*உடல் – தேகம், உடம்பு, சரீரம், மேனி, யாக்கை
*பாட்டு – கவி, கவிதை, செய்யுள், பா, பாடல், கீதம்
*புத்தகம் – ஏடு, நூல், இழை, பனுவல்
*மனைவி-மனையாள், இல்லாள், தலைவி, கிழத்தி
*சண்டை – சமர், அமர், போர், யுத்தம். #SHARE IT.
Sorry, no posts matched your criteria.