India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகில் அனைத்து நாடுகளும் 12 மணி நேர கடிகாரத்தை பின்பற்றுகின்றன. ஆனால் ஒரு நாட்டிலுள்ள நகரம் மட்டும் 500 ஆண்டுகளுக்கும் மேலாக 11 மணி நேரத்தை பின்பற்றுகிறது. அது எந்த நகரம் என பார்க்கலாம். சுவிஸ்ஸின் சோலோதர்னே அந்த நகரமாகும். இதுதவிர அந்நகரில் 11 தேவாலயங்கள், 11 அருங்காட்சியகம், 11 கோபுரம், 11 நீருற்று என அனைத்தும் 11ஆக உள்ளன. இதற்கு நியூமராலஜி மீதான நம்பிக்கையும் ஒரு காரணமாகும்.
மத்திய அரசின் உள்நாட்டு நீர் போக்குவரத்துத் துறையில் (IWAI) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அசிஸ்டென்ட் டைரக்டர், அசிஸ்டென்ட் ஹைட்ரோகிராபிக் சர்வேயர், லைசென்ஸ் என்ஜின் டிரைவர், ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட 11 பதவிகளில் காலியாக உள்ள 37 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் www.iwai.nic.in தளத்தில் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என மத்திய அரசு கூறுகிறது. மும்மொழிக் கொள்கையை நாங்கள் எப்படி ஏற்போம்? தமிழகத்தில் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைத்து, தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள்” என எச்சரித்தார்.
மாரி செல்வராஜின் “வாழை” கதை தனது கதை என்று எழுத்தாளர் சோ. தர்மன் உரிமை கோரியுள்ளார். திருவைகுண்டத்தில் வாழைத் தார்களை சுமந்த சிறுவர்களை பார்த்து “வாழையடி” என்ற சிறுகதையை எழுதியதாகவும், அந்தக் கதையே வாழை என்றும் அவர் கூறியுள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த தர்மன், “சூல்” என்ற நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர். அவரது கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது தெரியுமா? அது அண்டார்டிக் பாலைவனம்தான். அதன் பரப்பளவு 55 லட்சம் சதுர மைல்கள். மிகப்பெரிய வறண்ட பாலைவனம் சஹாரா (வட ஆப்பிரிக்கா). பசுமையாக காணப்பட்ட இப்பகுதி சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் தார். இது இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே இயற்கையான எல்லை கோட்டை உருவாக்குகிறது. தகவல் பிடித்தால் லைக் பண்ணுங்க.
இன்று காலை 10.30 மணிக்கு <<13957737>>Current Affairs<<>>இல் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. சர்தார் உஜ்ஜல் சிங் 4. பலாப்பழம், பனை மரம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
விஜய் தனது கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22இல் அறிமுகம் செய்தார். அந்த விழாவுக்கு 1111 எண் காரில் வந்தார். தவெக மாநாடு செப். 22இல் நடைபெறவுள்ளது. இந்த 3 எண்களையும் தனித்தனியே கூட்டினால் 4 வரும். விஜய் பிறந்த தேதி ஜூன் 22. இதை கூட்டினால் வருவது 4 என்பதால், நியூமராலஜிபடி அனைத்து நிகழ்வுகளிலும் 4 வரும்படி விஜய் பார்த்து காெள்வதாகக் கூறப்படுகிறது. உங்களின் ராசி எண் எது? அதை கீழே பதிவிடுங்க.
இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் முதல் போட்டி செப்.19-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ரிஷப் பந்த், ஜடேஜா, அக்சர் படேல், அஸ்வின், ஷர்தூல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.
இஸ்ரோவின் சந்திரயான் – 3 ஆய்வு செய்து அனுப்பிய தரவுகளின் படி, நிலவின் தென் துருவத்தில் பாறைக் குழம்புகளால் ஆன மாக்மா பெருங்கடல் இருந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வகத்தில் நடந்த சோதனையில், பிரக்யானின் 23 அளவீடுகளையும், நிலவின் மண்ணில் உள்ள பெரோன் அனோர்தோசைட் என்ற கனிமம் இருந்ததையும் வைத்து இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்.பி. வருண்குமாரையும், அவரது மனைவியான புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டேவையும் நாதக கட்சியினர் சிலர் வலைதளங்களில் மிக மோசமாக விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய கனிமொழி, “எந்த சூழலிலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வந்திதா பாண்டே மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வருபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.