news

News August 29, 2024

12, ITI படித்த பெண்களுக்கு வேலை: இன்று சிறப்பு முகாம்

image

12ம் வகுப்பு, ITI முடித்த 1,500 பெண்களை வேலைக்கு தேர்வு செய்யும் சிறப்பு முகாம், இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் சார்பில் இந்த முகாம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. SHARE IT

News August 29, 2024

முடிவில்லாமல் முடி வளர.. TIPS இதோ

image

*தேவையான அளவு (250 Gm ) கருவேப்பிலையை நன்கு காய வைத்து பொடியாக அரைக்கவும்.
*அந்தப் பொடியை 2ஆகப் பிரித்து, 2 வெள்ளைத் துணிகளில் தனித்தனியாக கட்டவும்.
*1 லி. தேங்காய் எண்ணெய்யை 2ஆகப் பிரித்து, அதில் கருவேப்பிலை முடிச்சினை ஊறவிடவும்.
*அந்த எண்ணெய் தீரும்வரை, நாள்தோறும் இரவு தூங்கச் செல்லும் முன்பு தலையில் தேய்த்து வந்தால், உங்கள் முடி ஸ்திரத்தன்மை அடைவதுடன் வேகமாக வளரும். Share It Now

News August 29, 2024

குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று வழங்கல்

image

தமிழகம் முழுவதும் இன்று, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்ட சிறார், 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ‘அல்பெண்டசோல்’ என்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். கடந்த வாரம் 94% பேருக்கு இந்த மாத்திரைகளை வழங்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று, மீதமுள்ளோருக்கு வழங்கப்பட உள்ளது. தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி, ஆகஸ்ட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது.

News August 29, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶குறள் எண்: 37 ▶குறள்: அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
▶பொருள்: அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

News August 29, 2024

மாயாஜால மாந்த்ரீகன் ‘தியான் சந்த்’

image

தியான் சந்த் எனும் மாயாஜால மாந்த்ரீகனின் 119வது பிறந்த நாள் இன்று. ஹாக்கி வரலாற்றில் தனி முத்திரை பதித்த தியான், நிலா வெளிச்சத்தில் பயிற்சி செய்ததால் ‘சந்த்’ என சேர்த்து அழைக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு. இவரது வருகைக்குப்பின், 1928, 1932, 1936 என தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக்கில் IND அணி தங்கம் வென்றது. தயான் சந்த் நினைவாக, அவரது பிறந்த நாளான ஆக.29ம் தேதி, தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.

News August 29, 2024

ஆகஸ்ட் 29: வரலாற்றில் இன்று

image

*1905 – இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்த நாள்
*1943 – தமிழ் சினிமா பிரபலம் விஜயகுமார் பிறந்த நாள்
*1959 – தெலுங்கு ஸ்டார் அக்கினேனி நாகார்ஜுனா பிறந்த நாள்
*1977 – தமிழ் சினிமா ஹீரோ விஷால் பிறந்த நாள்
*1985 – தமிழ் நாடக, திரைப்பட நடிகர் எம்.கே.ராதா நினைவு நாள்
*இந்தியாவின் தேசிய விளையாட்டு நாள்

News August 29, 2024

முன்னுதாரணமாக இருங்கள் அண்ணாமலை: MP துரை

image

அண்ணாமலை போன்ற படித்த இளைஞர்கள், அரசியலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என துரை வைகோ MP வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக முறையில், கொள்கை ரீதியிலான தாக்குதல் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அதுபோன்ற போக்கு அவருக்கும், பாஜகவுக்கும் நல்லதல்ல எனக் கூறினார். அரசியல் களத்தில் தற்போது இபிஎஸ்-அண்ணாமலை இடையே மோதல் போக்கு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

News August 29, 2024

BE படிப்பு: 70,403 இடங்கள் காலி!

image

BE மாணவர்கள் சேர்க்கைக்காக 3ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. ஆக.23இல் தொடங்கிய கலந்தாய்வில், 51,920 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். மொத்தம் 1.99 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், 70,403 BE இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப செப்.6-8 வரை துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு செப்.4ம் தேதிக்குள் <>இந்த<<>> இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News August 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட்-29 (ஆவணி 13) ▶வியாழக்கிழமை ▶நல்ல நேரம்: 10:45 – 11:45 AM ▶கெளரி நேரம்: 12:15 – 01:15 AM & 06:30 – 07:30 PM ▶இராகு காலம்: 01:30 – 03:00PM ▶எமகண்டம்: 06:00 – 07:30 AM ▶குளிகை: 09:00 – 10:30 AM ▶திதி: 04.59 AM வரை தசமி பின்பு ஏகாதசி ▶நட்சத்திரம் 08.38 PM வரை திருவாதிரை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம், மரணயோகம், அமிர்தயோகம் ▶சந்திராஷ்டமம்: 08.38 PM வரை அனுஷம்.

News August 29, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!