India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்கும் தேவர்களின் ஆசானான குரு பகவானுக்கு விரதமிருந்து, சென்னை பாடியில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோயிலுக்குச் சென்று, அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, கொண்டைக்கடலை நைவேத்தியம் படைத்து, குரு காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கினால், பண வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்.8 வரை நடைபெற உள்ள விழாவில், பிற மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவின் ஆசியை பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்குவதால், உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
*டெலிகிராம் CEO கைது – ஃபிரான்ஸிடம் ரஃபேல் விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தை UAE நிறுத்தி வைத்தது.
*நைஜீரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 49 பேர் பலி.
*ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சிக்கு ஷேக் ஹசீனா அரசு விதித்த தடையை நீக்கியது இடைக்கால அரசு.
*வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஆஸி., கட்டுப்பாடு – இந்தியாவுக்கு பாதிப்பு.
*2 பெண்கள் கொடூர கொலை-USAவைச் சேர்ந்த டெட்பூல் கில்லர் வேட் வில்சனுக்கு மரண தண்டனை.
தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள திரையுலகம் போல தமிழ் திரையுலகில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பேச யாரும் முன் வருவதில்லை என்றும், இதனால் தமிழ் திரையுலகில் எதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஊர்வசி குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?
கூட்டுறவு செயலி மூலம் ₹75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. இதற்காக கூட்டுறவு எனும் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்து, 8.5% வட்டியில் கடன் பெறலாம். இந்த கடனை அடைப்பதற்கு 20 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான கொடியேற்றம் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆலயத்தில், ஏசுவின் தாய் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி அளிப்பது சிறப்பு. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, அனைத்து மத பக்தர்களும் வழிபடும் தலமாக இது திகழ்கிறது.
10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெறலாம். தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 7,951 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இளநிலை பொறியாளர்கள்(7,934 Vacancy) மற்றும் டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
*பூமி – உலகம், புவி, பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்
*சந்திரன் – திங்கள், மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி
*அழகு – எழில், வனப்பு, கவின், வடிவு, அணி
*குழந்தை – மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு, மழலை
வயல் – பழனம், கழனி, கமம்
*இரத்தம் – குருதி, உதிரம், சோரி, கறை
*வனம் – காடு, ஆரணியம், கானகம், அடவி
ICC தலைவராக ஜெய் ஷாவை நியமிக்ப்பட்டது தெரிந்ததே. இந்நிலையில், அவருக்கு ஆதரவாக 15 பேர் வாக்களித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மையம் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதால் PCBயின் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 36 வயதில் ஜெய் ஷா ICC தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.