news

News August 29, 2024

தமிழ் திரையுலகிலும் பாலியல் தொந்தரவு: ஊர்வசி

image

தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக நடிகை ஊர்வசி குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள திரையுலகம் போல தமிழ் திரையுலகில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பேச யாரும் முன் வருவதில்லை என்றும், இதனால் தமிழ் திரையுலகில் எதுவும் நடக்கவில்லை எனக் கூறிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஊர்வசி குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?

News August 29, 2024

இந்த செயலி இருந்தால் ₹75 லட்சம் வரை வீட்டுக் கடன்

image

கூட்டுறவு செயலி மூலம் ₹75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. இதற்காக கூட்டுறவு எனும் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்து, 8.5% வட்டியில் கடன் பெறலாம். இந்த கடனை அடைப்பதற்கு 20 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

News August 29, 2024

வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடங்குகிறது

image

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா, ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கான கொடியேற்றம் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆலயத்தில், ஏசுவின் தாய் மாதா, கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி அளிப்பது சிறப்பு. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, அனைத்து மத பக்தர்களும் வழிபடும் தலமாக இது திகழ்கிறது.

News August 29, 2024

இன்று முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்

image

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெறலாம். தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

News August 29, 2024

7,951 Vacancy: இன்றே கடைசி

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 7,951 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இளநிலை பொறியாளர்கள்(7,934 Vacancy) மற்றும் டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளர், கெமிக்கல் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இந்த<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE NOW.

News August 29, 2024

ஒரு பொருள்.. பல சொல்..

image

*பூமி – உலகம், புவி, பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்
*சந்திரன் – திங்கள், மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி
*அழகு – எழில், வனப்பு, கவின், வடிவு, அணி
*குழந்தை – மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு, மழலை
வயல் – பழனம், கழனி, கமம்
*இரத்தம் – குருதி, உதிரம், சோரி, கறை
*வனம் – காடு, ஆரணியம், கானகம், அடவி

News August 29, 2024

ஜெய் ஷாவுக்கு எதிராக PCB

image

ICC தலைவராக ஜெய் ஷாவை நியமிக்ப்பட்டது தெரிந்ததே. இந்நிலையில், அவருக்கு ஆதரவாக 15 பேர் வாக்களித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மையம் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதால் PCBயின் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 36 வயதில் ஜெய் ஷா ICC தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 29, 2024

12, ITI படித்த பெண்களுக்கு வேலை: இன்று சிறப்பு முகாம்

image

12ம் வகுப்பு, ITI முடித்த 1,500 பெண்களை வேலைக்கு தேர்வு செய்யும் சிறப்பு முகாம், இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம், டாடா எலெக்ட்ரானிக்ஸ் சார்பில் இந்த முகாம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. SHARE IT

News August 29, 2024

முடிவில்லாமல் முடி வளர.. TIPS இதோ

image

*தேவையான அளவு (250 Gm ) கருவேப்பிலையை நன்கு காய வைத்து பொடியாக அரைக்கவும்.
*அந்தப் பொடியை 2ஆகப் பிரித்து, 2 வெள்ளைத் துணிகளில் தனித்தனியாக கட்டவும்.
*1 லி. தேங்காய் எண்ணெய்யை 2ஆகப் பிரித்து, அதில் கருவேப்பிலை முடிச்சினை ஊறவிடவும்.
*அந்த எண்ணெய் தீரும்வரை, நாள்தோறும் இரவு தூங்கச் செல்லும் முன்பு தலையில் தேய்த்து வந்தால், உங்கள் முடி ஸ்திரத்தன்மை அடைவதுடன் வேகமாக வளரும். Share It Now

News August 29, 2024

குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று வழங்கல்

image

தமிழகம் முழுவதும் இன்று, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நடைபெற உள்ளது. 19 வயதுக்குட்பட்ட சிறார், 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ‘அல்பெண்டசோல்’ என்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். கடந்த வாரம் 94% பேருக்கு இந்த மாத்திரைகளை வழங்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று, மீதமுள்ளோருக்கு வழங்கப்பட உள்ளது. தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி, ஆகஸ்ட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது.

error: Content is protected !!