India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IPL கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ‘இம்பேக்ட்’ விதிமுறை மோசமானதல்ல என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “வியூகங்களை அமைக்கவும், களத்தில் புதுமைக்கான வாய்ப்பையும் ஏற்படுத்த ‘இம்பேக்ட்’ விதி உதவுகிறது. அது ஆல்-ரவுண்டர்களை ஊக்குவிப்பதில்லை என்ற கருத்தில் துளியும் உண்மையில்லை. அவர்களை யாரும் தடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் ஆவின் பொருள்களை விற்க, நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் தவிர்த்து பிற பால் பொருள்களை விற்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய அவர், இதனால் ஆவின் சில்லறை விற்பனையில் பாதிப்பு ஏற்படாது என்றார். மேலும் இதுவொரு கூடுதல் வியாபாரம் தான் எனவும் கூறியுள்ளார். இதனால், வீட்டிற்கு தேவையான நெய், இனிப்புகள் போன்றவை இனி ரேஷனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் பயணித்த பெண் என்ஜீனியரை 2 பேர் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 3 நாளுக்கு முன்பு அந்த ரயில் காட்பாடி அருகே சென்ற போது, என்ஜீனியரின் மொபைலை 2 பேர் பறித்துள்ளனர். அவர்களை அவர் விரட்டிச் சென்றபோது, கழிவறைக்குள் தள்ளி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் ரயிலில் இருந்து குதித்து தப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாத ஆதரவு பதிவுகளை கட்டுப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் வழக்கில் பிரான்ஸ் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பாவெலின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், விசாரணை மாஜிஸ்திரேட், €5 மில்லியன் பிணையில், காவல் நிலையத்தில் கையெழுத்திடும் நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளார். அதே நேரத்தில், அந்நாட்டைவிட்டு வெளியேறவும் அவருக்கு தடை விதித்தார்.
கூட்டுறவு செயலியில் ₹75 லட்சம் வரை <<13964008>>வீட்டுக்கடனு<<>>க்கு விண்ணப்பிப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். கூட்டுறவு செயலியில் வங்கி சேவை பிரிவை தேர்வு செய்து, கடன் தகவல் குறிப்பை அழுத்த வேண்டும். அதில் வீடு, பயிர் உள்ளிட்ட பல கடன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் வீட்டுக்கடனை தேர்வு செய்து, அதில் கேட்கப்பட்ட விவரங்கள், முந்தைய கடன் விவரத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT
தமிழகத்தில் உண்ணக் கூடிய காளான் வளர்ப்பு, வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. காளான் முக்கிய உணவுப் பொருளாக மாறி வருவதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, மொட்டுக் காளான், பால் காளான் வகைகளை வளர்ப்பது, வேளாண் சாகுபடி கீழ் கொண்டு வரப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு கிடைக்கும் அரசின் அனைத்துவித மானிய உதவிகளும் காளான் வளர்ப்பவர்களுக்கும் கிடைக்க உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் செப்.3ம் தேதி வரை 6 நாள்கள் மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறியுள்ளது.
குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு. நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்கும் தேவர்களின் ஆசானான குரு பகவானுக்கு விரதமிருந்து, சென்னை பாடியில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோயிலுக்குச் சென்று, அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, கொண்டைக்கடலை நைவேத்தியம் படைத்து, குரு காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கினால், பண வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்.8 வரை நடைபெற உள்ள விழாவில், பிற மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவின் ஆசியை பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்குவதால், உள்ளூர் விடுமுறை அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
*டெலிகிராம் CEO கைது – ஃபிரான்ஸிடம் ரஃபேல் விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தை UAE நிறுத்தி வைத்தது.
*நைஜீரியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 49 பேர் பலி.
*ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சிக்கு ஷேக் ஹசீனா அரசு விதித்த தடையை நீக்கியது இடைக்கால அரசு.
*வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஆஸி., கட்டுப்பாடு – இந்தியாவுக்கு பாதிப்பு.
*2 பெண்கள் கொடூர கொலை-USAவைச் சேர்ந்த டெட்பூல் கில்லர் வேட் வில்சனுக்கு மரண தண்டனை.
Sorry, no posts matched your criteria.