news

News August 27, 2024

ஆகஸ்ட் 27: வரலாற்றில் இன்று

image

1916 – தமிழறிஞரும், எழுத்தாளருமான ந.சுப்பு ரெட்டியார் பிறந்தநாள்
1973 – தமிழ் சினிமா பின்னணிப் பாடகி மாலதி லட்சுமணன் பிறந்தநாள்
2002 – தமிழறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் அ.ச.ஞானசம்பந்தன் நினைவு நாள்
2003 – 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வந்தது.
2006 – இந்திய திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹிருஷிகேஷ் முகர்ஜி

News August 27, 2024

பாலியல் தொல்லை குறித்து புகாரளித்தால் நடவடிக்கை

image

கேரள சினிமா பாலியல் தொல்லை தொடர்பாக இதுவரை யார் மீதும் புகார் வரவில்லை என, அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். முன்னதாக, மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா குழு அளித்த அறிக்கை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News August 27, 2024

IPL ஓனர்களால் உத்தரவாதம் தர முடியாது: K.L.ராகுல்

image

அனைத்து போட்டிகளையும் வெல்லும் உத்திரவாதத்தை, IPL அணி உரிமையாளர்களால் வழங்க முடியாது என K.L.ராகுல் கூறியுள்ளார். புள்ளி விவரங்கள் அடிப்படையில் சிறந்த வீரர்களை வாங்கினாலும், தனிப்பட்ட ஒரு வீரருக்கு குறிப்பிட்ட ஒரு ஆண்டு மோசமானதாக இருக்கலாம் என சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரராக சிறப்பாக விளையாட முடியாது என்றார். IPLஇல் LSG அணிக்காக அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

News August 27, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட்-27 (ஆவணி 11) ▶செவ்வாய்கிழமை ▶நல்ல நேரம்: 07:45-08:45AM&04.45-05.45PM ▶கெளரி நேரம்: 10:45-11:45AM&07:30-08:30PM ▶இராகு காலம்: 03:00-04:30PM ▶எமகண்டம்: 09:00AM-10:30PM ▶குளிகை: 12:00-01:30PM ▶திதி: 07.30 AM வரை அஷ்டமி பின்பு நவமி ▶நட்சத்திரம் 08.54 PM வரை ரோகிணி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶அமிர்தாதி யோகம்: 08.54 வரை அமிர்தயோகம் ▶சந்திராஷ்டமம்: 08.54 PM வரை சுவாதி.

News August 27, 2024

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆக.30 ஃபர்ஸ்ட் சிங்கிள்

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிள் ஆக.30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில், அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். WUNDERBAR பிலிம்ஸ் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இந்த படத்தில் அனிகா, பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். யாரெல்லாம் இந்த படத்திற்காக வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.

News August 27, 2024

அதிமுக மூத்த தலைவர் எம். சுப்பையன் காலமானார்

image

அதிமுகவின் விவசாய அணித் துணைத் தலைவர் எம். சுப்பையன் உடல்நலக்குறைவால் காலமானார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் நம்பிக்கையை பெற்றவர். இவர் அதிமுகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அதிமுக 2ஆக பிரிந்தபோது இபிஎஸ் பக்கம் சாய்ந்தார். அவரது மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News August 27, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 27, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 27, 2024

தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி செய்வதால்…

image

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, * எடை கட்டுக்குள் இருக்கும். * மனநலம் மேம்படும், மனச்சோர்வு / பதட்டம் போன்ற அறிகுறிகள் குறையும். * எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாகும். * செரிமானம் மேம்படும் * நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

News August 26, 2024

உக்ரைன் போர் குறித்து ஜோ பைடனுடன் பேசிய மோடி

image

உலகளாவிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நிலவரம் குறித்து பேசியதாகவும், அங்கு அமைதி நிலவ இந்தியா முழு ஆதரவு வழங்கும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேசத்தின் நிலை குறித்தும், அங்கு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!