news

News August 29, 2024

ஜீரோ டூ ஹீரோ: அசுர வளர்ச்சி கண்ட Swiggy

image

நாட்டின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக உருவெடுத்துள்ள Swiggy நிறுவனம் தனது முதல் வர்த்தக நாளில் (ஆக 6, 2014) ஒரு ஆர்டரைகூட எடுக்க முடியாமல் திணறியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தோல்விகளைக் கண்டு துவளாமல், அதன் சிஇஓ ஸ்ரீஹர்ஷா முயற்சியால் திருவினையாக்கியுள்ளார். 10 ஆண்டுகளை நிறைவுசெய்த அந்நிறுவனம் இன்று 3 லட்சம் உணவகங்கள், 15 லட்சம் வாடிக்கையாளர்களுடன் அசுர வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.

News August 29, 2024

பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்த சுரேஷ் கோபி

image

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரில்,
தன்னையும் தனது பாதுகாப்பு அதிகாரியையும் காரில் ஏற விடாமல் தடுத்து, இடையூறு செய்ததுடன், அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது.

News August 29, 2024

உலகின் சிறந்த இணைப்பு ஏர்போர்ட் எது தெரியுமா?

image

2024ன் உலகின் சிறந்த இணைப்பு ஏர்போர்ட் குறித்து CNN செய்தி வெளியிட்டுள்ளது. அதில், 2018இல் துருக்கியின் இஸ்தான்புல்லில் திறக்கப்பட்ட கிரான்ட் ஏர்போர்ட்டே சிறந்த ஏர்போர்ட், அங்கிருந்து 309 நான்ஸ்டாப் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 9 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இணைப்பு ஏர்போர்ட் என்பது நெடுந்தூர பயணிகள், இடையில் இறங்கி வேறு விமானத்திற்கு மாறும் இடமாகும்.

News August 29, 2024

40% மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேரவில்லை..

image

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 40% பேர் கல்லூரியில் சேரவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் சேரும்போது வழங்கப்படும் எமிஸ் எண், கல்லூரியில் சேருகையில் யுமிஸ்-ல் பதிவு செய்யப்படும். அதை ஆய்வு செய்ததில், 2022-23இல் 12 முடித்த 3,97,809 மாணவர்களில் 2,39,270 பேர் உயர் கல்வியில் இணைந்துள்ளனர். 1,13,099 பேர் சேரவில்லை என கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

Current Affairs: கேள்விகளுக்கு பதிலளியுங்கள்

image

1.புஜியன்வெனேட்டரின் (பறவை டைனோசர்) புதைபடிவம் எங்கு கண்டறியப்பட்டது? 2.வான்வழிப் போருக்காக ‘வால்கெய்ரி’ என்ற AI ரோபோவை எந்த நாடு அறிமுகப்படுத்தியது? 3.டுராண்ட் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? 4.இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி ‘மேக்னா கார்ட்டா’ என அழைக்கப்படுகிறது? 5.புக்கர் பரிசை வென்ற ‘Tomb of Sand’ நாவலை எழுதியவர் யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News August 29, 2024

மனித குலத்தை அழிக்க வந்த பேரழிவு ஆயுதம்

image

ஜப்பானில் 2.30 லட்சம் மக்களின் (கதிர்வீச்சு) உயிரிழப்புக்கு அணு ஆயுதம் எனும் பேரழிவே மூலக் காரணமாகும். இத்தகைய அழிவு அறிவியல் கண்டுபிடிப்பான அணு ஆயுத உற்பத்தியை தடுக்க அணு ஆயுத சோதனை எதிர்ப்பு நாள் ஆக. 29இல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1996இல் ‘PTBT ஒப்பந்தம்’ ஏற்படுத்தப்பட்டாலும், முழு அளவில் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இஸ்ரேல்-ஈரான் மோதல் வெடித்துள்ள நிலையில் இது குறித்து ஐ.நா கவனம் செலுத்துமா?

News August 29, 2024

பாஸ்போர்ட் தளம் 5 நாள்கள் செயல்படாது.. ஏன் தெரியுமா?

image

பாஸ்போர்ட் புதுப்பிப்பு, அப்பாயின்ட்மெண்ட் பதிவுக்கு பயன்படும் ஆன்லைன் தளம் இன்று முதல் செப்.2 வரை 5 நாள்கள் இயங்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் சேவை தளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், பராமரிப்பு பணியால் இன்று இரவு 8 மணி முதல் செப்.2 காலை 6 மணி வரை இணையதளம் செயல்படாது. 30ம் தேதிக்கு பதிவான முன்பதிவுகள் வேறு தேதிக்கு மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. SHARE IT

News August 29, 2024

MI அணியில் ரோஹித் நீடிப்பாரா?

image

கேப்டனாக இல்லையென்றால் கூட MI அணிக்காக ரோஹித் ஷர்மா தொடர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடுவாரென RR அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோஹித் பலமுறை மும்பை அணியை தலைமை தாங்கியுள்ளதாகக் கூறிய அவர், ஹிட்மேனுக்கு பணம் பெரிதல்ல என்றார். அத்துடன், MI-க்காக சாதாரண வீரராக விளையாடினாலே போதும்; அதுவே சூப்பராக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

News August 29, 2024

TVK நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

image

தவெகவில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்சி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு தலைமையிடம்
இருந்து அவசர உத்தரவு பறந்துள்ளது. அதில், மாவட்ட வாரியாக அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் விஜய் பரிசளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க அக்கட்சியினர் மும்முரமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

News August 29, 2024

பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு: விஷால்

image

தமிழ் நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க 3 நாளில் குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க பாெதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடிகைகள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. இதனால் மலையாள திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது. இதுகுறித்த கேள்விக்கு விஷால், தமிழ்நாட்டிலும் 10 பேர் குழு அமைக்கப்படும், அதில் புகார் அளிக்கலாம் என்றார்.

error: Content is protected !!