news

News August 29, 2024

ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

image

ஜீவா – பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பிளாக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரவின் கண்கள் படத்தை இயக்கிய பாலசுப்ரமணி இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி இசையமைத்துள்ளார். மாநகரம், டாணாக்காரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.

News August 29, 2024

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

image

மத்திய- வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மத்தியமேற்கு, அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் எனவும், 2 தினங்களில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என IMD குறிப்பிட்டுள்ளது.

News August 29, 2024

வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: ₹100 கோடி ஒதுக்கீடு

image

2025 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ₹100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 1.77 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய அரசாணையும் வெளியிட்டுள்ளது. அத்துடன், வேட்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

News August 29, 2024

அம்பானியை முந்திய அதானி

image

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை அதானி முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2024ம் ஆண்டின் ஹுரன் இந்தியா கோடீஸ்வரர் பட்டியலில் அதானி ₹11.6 லட்சம் காேடியுடன் முதலிடத்திலும், அம்பானி ₹10.14 லட்சம் காேடியுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். சிவ் நாடார் (₹3.14 லட்சம் காேடி), சைரஸ் பூனாவாலா (ரூ.2.89 லட்சம் கோடி), திலிப் சங்க்வி(₹2.49 லட்சம் கோடி) ஆகியோர் 3,4,5 வரையிலான இடங்களில் உள்ளனர்.

News August 29, 2024

ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு என்ன?

image

ICC தலைவராக பதவியேற்கவுள்ள ஜெய் ஷாவின் நிகர சொத்து மதிப்பு குறித்த தகவலை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. அதன்படி, BCCI செயலாளராக உள்ள அவரது சொத்து மதிப்பு ₹124 கோடியாகும். நாளொன்றுக்கு சர்வதேச சந்திப்புகளுக்கு ₹84,000 சம்பாதிப்பதோடு, பயணம் & தங்கும் படியும் பெறுகிறார். டெம்பிள் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிவரும் அவர் குசும் ஃபின்சர்வ் நிறுவனத்தில் 60% பங்குகளை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

News August 29, 2024

எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது முடியும்?

image

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி எப்போது முடியும் என மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கட்டுமான பணி தாமதமாவது தொடர்ந்தால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். கொரோனா தொற்று காலத்தால் தாமதமானதாக மத்திய அரசு தரப்பு பதிலளிக்க, 2022ல் கொரோனா முடிந்து விட்டது. அதனை காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்து, சுகாதார செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

News August 29, 2024

மதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

image

காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதியை கட்சி பதவியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை புறநகர் மாவட்ட செயலாளரான கருணாகரன் கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

ஒரே வருஷத்தில் ₹ 5 லட்சம் கோடி ஈட்டிய அதானி!

image

பங்கு சந்தை வர்த்தகத்தில் சர்ச்சைகளுக்கு பெயர் போன தொழிலதிபர் கவுதம் அதானி குடும்பத்தின் வருமானம் 95% அதிகரித்துள்ளது. ஹுருன் இந்தியா வெளியிட்ட Rich List 2024 அறிக்கையில், 2023இல் ₹5.96 லட்சம் கோடியாக இருந்த நிகர மதிப்பு, ₹11.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது. துறைமுகங்கள் 98%, அதானி எனர்ஜி, அதானி கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் & பவர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 78% உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

News August 29, 2024

1,130 கான்ஸ்டபிள் வேலை: நாளை விண்ணப்பப்பதிவு

image

CISF படைப்பிரிவில் 1,130 கான்ஸ்டபிள் பயர்மேன் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு நாளை முதல் (ஆக. 30) CISF படையின் cisfrectt.in. இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாளாகும். 1,130 இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 466, OBC 236, எஸ்சி 161, எஸ்டி 153 , EWS பிரிவினருக்கு 114 இடங்கள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News August 29, 2024

தயாரிப்பாளர் பாலியல் இச்சைக்கு அணுகினார்: குஷ்பு

image

திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் பாலியல் இச்சைக்கு அணுகியதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், தெலுங்கு படப்பிடிப்பில் மேக்கப் ரூமில் இருந்தபோது தயாரிப்பாளர் உள்ளே வந்ததாகவும், செருப்பு அடி விழும் என எச்சரித்ததால் அவர் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது தந்தை 8 வயது முதல் 15 வயது வரை தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!