India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
EX IG பொன் மாணிக்கவேல் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, பொன் மாணிக்கவேல் குற்றம் செய்ததற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள “விடுதலை – 2” டிச.20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் சூரியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், 2ஆம் பாகத்தில் விஜய் சேதுபதியின் (கலியபெருமாள்) கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக இளையராஜா 4 பாடல்களை உருவாக்கி உள்ளாராம்.
சந்தை மதிப்பு ₹20,000 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அது LargeCap நிறுவனமாகும். அதுவே ₹5,000 – ₹20,000 கோடியாக இருந்தால், MidCap நிறுவனம் என்றும், ₹5,000க்கும் குறைவான சந்தை மதிப்பு கொண்டவை SmallCap நிறுவனங்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. LargeCap பங்குகள் நீண்ட வரலாறு கொண்ட பாரம்பரிய நிறுவனங்களாக இருக்கும். இவற்றில் ரிஸ்க் குறைவு. அதற்கு நேர்மாறானது SmallCap. <<-se>>#sharemarket<<>>
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், FLA அனுமதியளிக்கும் பட்சத்தில் பந்தயம் நடத்தலாம். மருத்துவமனை, ரயில் நிலையங்களுக்கு செல்வோருக்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என தெரிவித்துள்ளது.
‘தி கோட்’ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் தேவராஜன் அளித்துள்ள அந்த புகாரில், அனுமதியின்றி ‘தி கோட்’ படம் 6 காட்சிகள் திரையிடப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறும் தியேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார். இப்படம் செப்.5இல் வெளியாக உள்ளது.
தென்னாபிரிக்க நாடான நமீபியா 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சி & பஞ்சத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் வேளாண் உற்பத்தி கடுமையாக சரிந்து, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 7 லட்சம் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், இறைச்சிக்காக யானை, வரிக்குதிரை உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளை கொல்ல அரசு திட்டமிட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பிற்பகல் வர்த்தகத்தின்போது, 82,285 என்ற புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் 349 புள்ளிகள் உயர்வுடன் 82,135 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் 4%, பஜாஜ் பைனான்ஸ் 2.4%, எச்சிஎல் டெக் பங்கு 1.7%, ஐடிசி, ரிலையன்ஸ் பங்குகள் தலா 1.5% உட்பட 12 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.
திருப்பதியில் ஆதார் கார்டை காண்பித்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இடைத்தரகர்கள் முறைகேடாக லட்டை அதிக விலைக்கு விற்பதை தவிர்க்கும் நோக்கில், இன்று முதல் இந்த முறையை கொண்டுவந்துள்ளது. மேலும், ஒரு நபருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், கூடுதலாக லட்டு தேவைப்படுவோர் ₹50 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள மலையாள நடிகர் முகேஷை கைது செய்ய தடை விதித்து எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன் ஜாமின் கேட்டு முகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம்., இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், பாலியல் புகாருக்குள்ளான முகேஷ், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.வாக நீட்டிக்க, முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இந்தியாவில் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது என முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார். AI இன் வளர்ச்சி, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். AI கட்டமைப்புகளை மேம்படுத்த ஜியோ பிரைன் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.