news

News August 29, 2024

1,000 கோல்கள் அடிப்பதே இலக்கு: ரொனால்டோ

image

1,000 கோல்கள் அடிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ விருப்பம் தெரிவித்துள்ளார். போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ரொனால்டோ (39), தற்போது கிளப் போட்டிகளில் சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 899 கோல்கள் அடித்துள்ள அவர், ஓய்வு பெறுவதற்கு முன்பு 1000 கோல்கள் அடிப்பதே தனது வாழ்க்கையின் லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

News August 29, 2024

Health: பனங்கற்கண்டின் மருத்துவ பலன்கள்

image

பனங்கற்கண்டில் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம், மெக்னீசியம் சத்துகள் அதிகம் உள்ளன. அவற்றில் உள்ள இரும்பு, துத்தநாகம் சத்துகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். சரும சேதத்தை தவிர்க்க, இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்கள் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மேலும், மலச்சிக்கலுக்கு தீர்வாக நார்ச்சத்து மிக்க உணவு பொருளாகவும் இது உள்ளது.

News August 29, 2024

2 நாள் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல ரெடியா?

image

முகூர்த்தம் மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, ஆக.30, 31ஆகிய தேதிகளில் 715 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று TNSTC அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை, குமரி, நெல்லை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க, www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்யுங்கள்.

News August 29, 2024

செப்.20இல் வேட்டையன் ஆடியோ ரிலீஸ்?

image

வேட்டையன் இசை வெளியீட்டு விழா செப்.20இல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, கடந்த சில வாரங்களாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்., 10இல் படம் வெளியாக உள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது.

News August 29, 2024

2,555 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை: முகேஷ் அம்பானி

image

2,555 கண்டுபிடிப்புகளுக்கு ரிலையன்ஸ் காப்புரிமை கோரியுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் உயிர் ஆற்றல் கண்டுபிடிப்புகள், சூரிய சக்தி மற்றும் பிற பசுமை ஆற்றல் மூலங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் சிறந்த 50 நிறுவனங்களுக்குள் ரிலையன்ஸை கொண்டு வருவதே இலக்கு எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

News August 29, 2024

அமித்ஷாவுக்கு கிண்டலாக வாழ்த்து சொன்ன மம்தா

image

ICC தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு அமித்ஷாவுக்கு, மம்தா வாழ்த்து கூறியுள்ளார். அதில் “உங்கள் மகன் அரசியல்வாதியாகவில்லை. ஆனால், அதைவிட உயர்ந்த ஐசிசிக்கு தலைவராகியுள்ளார். உங்கள் மகன் சக்தி வாய்ந்தவராகிவிட்டார். அவரின் சாதனைக்கு உங்களுக்குத்தான் வாழ்த்து கூற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். மம்தாவை போன்று நடிகர் பிரகாஷ் ராஜும் ஜெய்ஷா ஐசிசி தலைவரானதை விமர்சித்திருந்தார்.

News August 29, 2024

திமுகவில் சண்டையா? அமைச்சர் பதிலடி

image

திமுகவில் சீனியர் – ஜூனியர் சண்டையெல்லாம் ஒரு காலமும் வராது என்று ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக கட்டுப்பாட்டோடு வீறுநடை போடுகிறது. அதேபோல முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லை, திட்டமிட்டப்படி சிறப்பாக உள்ளது எனக் கூறிய அவர், ஒரு காலத்திலும் ஆர்.பி.உதயகுமாரின் பகல் கனவு பலிக்காது என்றும் கூறியுள்ளார்.

News August 29, 2024

சட்டம் அறிவோம்: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

image

இந்தியாவில் கடந்த 1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பொருள்களின் தரம், செயல்பாடு தெரிந்து கொள்வதற்கான உரிமை உள்ளிட்ட 6 உரிமைகளை இந்த சட்டம் வழங்குகிறது. ஒரு குறை எழுந்து 2 ஆண்டுகளுக்குள் புகார் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர் முதலில் எதிர்தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பதில் கிடைக்காவிட்டால் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.

News August 29, 2024

தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் இல்லை: அமைச்சர்

image

கேரள திரையுலகைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். கேரளாவில் நடிகைகள் பாலியல் புகார் அளித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் காவல் நிலையங்களில் பதியப்படவில்லை என்றார். அவ்வாறு ஏதேனும் புகார் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

News August 29, 2024

‘கூலி’-யில் ‘சைமனாக’ களமிறங்கிய நாகார்ஜுனா

image

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தில், தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா, ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று நாகர்ஜூனாவின் பிறந்தநாளையொட்டி படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு, இது குறித்த தகவல் இணையத்தில் கசிந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!