news

News August 30, 2024

Bro வாழ்த்துகள்.. தனுஷ் ட்வீட்

image

சென்னையில் F4 கார் ரேஸ் நடத்தும் அமைச்சர் உதயநிதிக்கு, நடிகர் தனுஷ் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், “இந்த அற்புதமான முயற்சி, Marquee விளையாட்டின் இந்திய இலக்காக, சென்னையை தரம் உயர்த்தும். வாழ்த்துகள் Bro” எனக் கூறியுள்ளார். ஆக.31, செப்.1இல் தீவுத் திடல் சுற்றுவட்டாரப் பகுதியில் F4 ரேஸ் நடைபெற உள்ளது. ஆக.31 காலையில் மட்டும் போட்டிகளை இலவசமாகக் காணலாம்.

News August 30, 2024

ஒரு புள்ளியில் World Record மிஸ்ஸிங்

image

பாரிஸ் பாராலிம்பிக்கில், இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி, 1 புள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். வில்வித்தை போட்டி தரவரிசை சுற்றில், ஷீத்தல் தேவி 703 புள்ளிகள் எடுத்து உலக சாதனை படைத்தார். சில நொடிகளில் துருக்கி வீராங்கனை ஒஸ்னூர் க்யூர் 704 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம், ஜெசிகா ஸ்ட்ரெட்டன் (694), ஃபோப் பேட்டர்சனின் (698) முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

News August 30, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட்-30 (ஆவணி 14) ▶வெள்ளிக்கிழமை ▶நல்ல நேரம்: 12:15-01:15 AM & 04:45-05:45 PM ▶கெளரி நேரம்: 01:45-02:45 AM & 06:00-07:30 PM ▶இராகு காலம்: 10:30 AM-12:00PM ▶எமகண்டம்: 03:00-04:30 PM ▶குளிகை: 07:30-09:00 AM ▶திதி: 04.38 AM வரை ஏகாதசி பின்பு துவாதசி ▶நட்சத்திரம் 09.09 PM வரை புனர்பூசம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶அமிர்தாதி யோகம்: அமிர்தயோகம், சித்தயோகம், ▶சந்திராஷ்டமம்: 09.09PM வரை கேட்டை.

News August 30, 2024

‘முத்தமிழ் முருகன் மாநாடு’ தீர்மானங்களை நிறைவேற்றுக

image

முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்களை, தமிழக அரசு உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு அடி பணியாமல் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். பழநியில் ஆக.24, 25ஆம் தேதிகளில் ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ நடத்தப்பட்டு 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு DMK கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

News August 30, 2024

செப்.20இல் ‘சட்டம் என் கையில்’ ரிலீஸ்

image

சதீஷ் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ படம், செப்.20இல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அஜய் ராய், பவல் நவகீதன், மீம் கோபி, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சதீஷ் ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. யாரெல்லாம் ‘சட்டம் என் கையில்’ படத்திற்கு வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.

News August 30, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 30, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 30, 2024

டெஸ்டில் ஜோ ரூட் புதிய சாதனை

image

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த இங்கி., வீரர் ஜோ ரூட் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 145 டெஸ்டில் விளையாடியுள்ள அவர் இதுவரை 33 சதம் அடித்துள்ளார். சச்சின் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். டிராவிட் 36, கவாஸ்கர் 34 சதங்களுடன் முறையே 5 மற்றும் 7ஆவது இடத்தில் உள்ளனர். மே.இந்திய தீவுகளின் ஜாம்பவான் லாரா 34 சதத்துடன் 8ஆவது இடத்தில் உள்ளார்.

News August 29, 2024

ஆங்கிலம் அறிவோம்: Advocate vs Lawyer

image

Advocate என்பவர் சட்டம் படித்து விட்டு, பார் கவுன்சிலால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிமன்றத்தில் வாதாடும் வழக்குரைஞர். Lawyer அதாவது வழக்கறிஞர் என்பவர் சட்டம், வழக்கு பற்றி அறிந்தவர். அவரால் நீதிமன்றத்தில் வாதாட முடியாது. உதவி தேவைப்படும் தனிநபர், நிறுவனங்களுக்கு சட்ட ரீதியான அறிவுரைகள் வழங்குவது, ஆவணங்கள் தயார் செய்வது அவர்களின் பணி. தகவல் பிடித்தால் லைக் பண்ணுங்க. #English

News August 29, 2024

ராசி பலன்கள் (30.08.2024)

image

*மேஷம் – மகிழ்ச்சியான நாளாக அமையும் *ரிஷபம் – பெருமையான நாளாக இருக்கும் *மிதுனம் – நேர்மையுடன் செயல்படுவீர் *கடகம் – ஓய்வு தேவை *சிம்மம் – பிறருக்கு தானம் செய்வீர்கள் *கன்னி – சினம் கொள்ளாதீர் *துலாம் – பண வரவு இருக்கும் *விருச்சிகம் – வீண் அலைச்சல் உண்டாகும் *தனுசு – கவனத்துடன் செயல்படுங்கள் *மகரம் -தோல்வி ஏற்படும் *கும்பம் – பிறரின் அன்பு கிடைக்கும் *மீனம் – சிறப்பான நாளாக அமையும்

error: Content is protected !!