India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியை வென்று ODI தொடரை இந்தியா சமன் செய்யுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. 3 ODI போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி, வெற்றி, தோல்வியின்றி முடிந்தது. 2வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. இந்நிலையில் இன்று நடக்கும் 3வது போட்டியில் இந்திய அணி வென்றால் தொடர் சமன் ஆகும். இல்லையேல், இலங்கை அணி தொடரை கைப்பற்றி விடும்.
சென்னை & அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 3 மணிநேரமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக திருச்சி, சேலம், குமரி, நெல்லை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய (30 – 40 கி.மீ., வேகத்தில்) மழையும், வேலூர், கடலூர், காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்பட 16 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது.
சக்தி வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதம் வரும் பூரத்தில் அம்பாள் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று அதிகாலையில் நீராடி, விரதமிருந்து, மாலை கோயிலுக்குச் சென்று, உமையாளுக்கு சந்தனம் – குங்குமம் காப்பு சாற்றி, கண்ணாடி வளையல்கள் அணிவித்து, ஐவகை சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் குழந்தைப் பேறு உள்ளிட்ட 16 செல்வங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
*புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது – ஸ்டாலின் *ED பதிந்த 93% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது – பங்கஜ் சவுத்ரி *ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் தேர்வு
*தமிழகத்தில் ஐபோன் உதிரிபாக தொழிற்சாலையை அமைக்க மதர்சன் குழுமம் திட்டம் *Paris Olympics: மல்யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு வினேஷ் போகத் தகுதி பெற்றார்.
✍ஏழைகள் பணத்தில் முதலீடு செய்யும்போது, பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கின்றனர். ✍வாழ்க்கையில் வெற்றிபெற சரியான நபர்களைக் கண்டறியுங்கள்; சிறந்த நபர்களை அல்ல. ✍ஒருபோதும் அரசுடன் வியாபாரம் செய்யாதீர்கள். ✍இந்த உலகில் மிகவும் நம்பமுடியாத விஷயமென ஒன்று உண்டென்றால், அது மனித உறவுகள்தாம். ✍நேர்மை என்பது மிக விலையுயர்ந்தது. அதை மலிவான நபர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.
உலக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் சீரிஸின் அடுத்த பாகமாக ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படம் உருவாகவுள்ளது. ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கவுள்ள இப்படத்தில் தனுஷை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘தி கிரேமேன்’ படத்தில் தனுஷ் நடித்து இருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் கோல்ப், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், டிரிபிள்ஜம்ப், உயரம் தாண்டுதல், ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் நடைபெறவுள்ள மல்யுத்தத்தில் (மகளிருக்கான 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில்) அமெரிக்காவின் சாரா ஹில்டுபிரான்டுக்கு எதிராக களமிறங்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
▶ஆகஸ்ட் – 7 ▶ ஆடி – 22 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: திரிதியை ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶முகூர்த்தம்: இல்லை ▶யோகம்: அமிர்த யோகம் ▶பிறை: வளர்பிறை ▶ நட்சத்திரம்: பூரம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
வங்கதேசத்தில் அமைய இருக்கும் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை ஏற்கவிருக்கும் முகமது யூனுஸ் (83) யார் என இங்கே காண்போம். 1983இல் கிராமீன் வங்கியை நிறுவிய அவர், அதன் மூலம் சிறுகடன்களை வழங்கி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார். இதற்காக அவருக்கு 2006இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2007இல் ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல்கொடுத்த அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஷேக் ஹசீனா அரசை எதிர்த்து வந்தார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததன் எதிரொலியாக அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர் பிரதிநிதிகளை அழைத்து காபந்து அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் முன்மொழிவின்படி, இடைக்கால அரசின் தலைவராக பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தேர்ந்தேடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.