news

News August 30, 2024

சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்லும் விஜய்

image

சென்னையில் இருந்து தனி விமானம் முலம் நடிகர் விஜய் சீரடி புறப்பட்டு சென்றுள்ளார். அடுத்த வாரம் (செப்.5) ‘THE GOAT’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து, தவெக கட்சி மாநாடும் செப்.23ஆம் தேதி நடைபெற உள்ளதால், அவர் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி, விஜய்யின் இந்த ஆன்மிக பயணத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் சென்றுள்ளார்.

News August 30, 2024

2025 ஐபிஎல் போட்டியிலும் தோனி… ரெய்னா விருப்பம்

image

2025 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டுமென சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஎஸ்கே கேப்டன்ஷிப்பை ருதுராஜ் புரிந்து கொள்ள உதவும் வகையில், மேலும் ஓராண்டு தோனி விளையாட வேண்டும் என்றார். 2024 ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் தோனி வழங்கினார். இதையடுத்து அவர் ஓய்வு பெறலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

News August 30, 2024

2029க்குள் र50K கோடிக்கு பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி

image

2029க்குள் र50,000 கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 2023-24இல் இந்தியா र21K கோடிக்கு ஏற்றுமதி செய்திருப்பதாகவும், உற்பத்தி र1.27 லட்சம் கோடியை தாண்டிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். உற்பத்தியை இந்த நிதியாண்டில் र1.75 லட்சம் கோடி, 2029க்குள் र3 லட்சம் காேடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

News August 30, 2024

யார் இணைந்தால் மாஸாக இருக்கும்?

image

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கூலி’ படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது. பான் இந்திய திரைப்படமான இதில் நாகர்ஜூனா (தெலுங்கு), செளபின் சாஹிர் (மலையாளம்) ஆகியோர் நடிக்க கமிட்டாகி உள்ளனர். இந்தியிலிருந்து யார்இணைந்தால் மாஸாக இருக்கும் என கமெண்ட்டில் பதிவிடுங்கள்!

News August 30, 2024

சற்றுமுன்: தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்

image

தமிழக பாஜகவை நிர்வகிக்க மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராம ஸ்ரீநிவாசன், SR சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உயர்கல்விக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது பணிகளை கவனிக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பேரும் மாநில மையக் குழுவுடன் ஆலோசித்து ஒவ்வொரு மண்டலமாக கட்சிப் பணியை கவனிக்க உள்ளனர்.

News August 30, 2024

சுப்ரீம் கோர்ட்டிடம் மன்னிப்பு கேட்டார் தெலுங்கானா CM

image

கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது குறித்த கருத்துக்காக சுப்ரீம் கோர்ட்டிடம் (SC) தெலுங்கானா CM ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திய நீதித்துறை மீது மிகுந்த மரியாதை, நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, AAP-யின் சிசோடியாவுக்கு 15 மாதம் கழித்து ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், கவிதாவுக்கு 5 மாதத்தில் வழங்கப்பட்டதாக ரெட்டி தெரிவித்த கருத்துக்கு SC அதிருப்தி வெளியிட்டிருந்தது.

News August 30, 2024

தேர்வு அறைகளில் சிசிடிவி கேமரா.. சிபிஎஸ்இ உத்தரவு

image

2025ஆம் ஆண்டு முதல் தேர்வு அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை எடுப்பது குறித்து ஜூன் மாதம் சிபிஎஸ்இ ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்வு மையங்கள், அறைகளை வீடியோ ரெக்கார்ட் செய்து, பதிவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிசிடிவி கேமரா பொருத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. அதில் செலவில் பாதியை ஏற்பதாக கூறியுள்ளது.

News August 30, 2024

13 ஓடிடிகளுடன் புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜியோ

image

ஜியோ நிறுவனம் ₹448 கட்டணத்தில் புது ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 28 நாள்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை ஜியோ அளிக்கிறது. இத்திட்டத்தின்கீழ், சோனி லிவ், ஜீ 5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன்நெக்ஸ்ட், ஜீயோ சினிமா உள்ளிட்ட 13 ஓடிடிகளை இலவசமாக அளிக்கிறது. SHARE IT

News August 30, 2024

வாய்வு தொல்லை இனி நெருங்கவே நெருங்காது!

image

உடலில் வாய்வு அதிகமாக சேரத் தொடங்கினால் உடலில் பல இடங்களில் குத்தலும், குடைச்சலுமாக வேதனை தரும். இவர்கள் 6 பூண்டு பற்களை எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வறுத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தாலே வாய்வு தொல்லை காணாமல் போகும். கொழுப்பை கரைப்பதற்கும், ரத்த அழுத்தத்திற்கும் கூட பூண்டு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

News August 30, 2024

6.4 லட்சம் குழந்தைகளை வஞ்சிக்கும் இஸ்ரேல்!

image

காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க இஸ்ரேல் மறுத்துள்ளது. காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த UNRWA அமைப்பு திட்டமிட்டிருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக காசாவில் உள்ள குழந்தை ஒன்று டைப்-2 வகை போலியோ வைரசால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக WHO புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!