news

News August 7, 2024

2 வாரங்களில் சவரனுக்கு ₹3,960 சரிவு

image

ஜூலை 22இல் ஒரு கிராம் தங்கம் ₹6,825ஆகவும், சவரன் தங்கம் விலை ₹54,600ஆகவும் இருந்தது. அதற்கடுத்த நாள், மக்களவையில் தாக்கலான பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதையடுத்து, விலை குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த 2 வாரங்களில் தங்கம் விலை கிராமுக்கு ₹495 குறைந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை 2 வாரங்களில் ₹3,960 சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த 2 நாள்களில் ₹1,120 குறைந்துள்ளது.

News August 7, 2024

BREAKING: திமுக அமைச்சர்கள் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

image

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கீழமை நீதிமன்றங்கள் இருவரையும் விடுவித்த நிலையில், இவ்வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இந்நிலையில், இவ்வழக்கில் இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

Big Boss: கமல் விலக இதுதான் உண்மை காரணமா?

image

Big Boss கடந்த சீசனில், பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி, கமலை மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்தது. இதுதான் அவர் விலக உண்மையான காரணம் என இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அவர் பல காரணங்களை கூறினாலும், தேர்தல் பிரச்சாரம், படப்படிப்பு என படு பிஸியாக இருந்தபோதும், அவர் நிகழ்ச்சியை நடத்தியதாக பலர் கூறிவருகின்றனர்.

News August 7, 2024

போராடியபோது நாட்டின் மகள் இல்லையா?: பஜ்ரங் புனியா

image

டெல்லியில் போராடியபோது ஒரு வார்த்தை கூட பேசாத மத்திய அரசு, வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸில் சாதித்ததும், நாட்டின் மகள் ஆகிவிட்டாரா என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கேள்வி எழுப்பியுள்ளார். தான் உட்பட போராடியவர்களை சாதி ரீதியாக பிரித்து, ₹15-க்கு போராடியதாக விமர்சித்தார்கள் எனவும், வினேஷ் போகத்தின் வெற்றி, பாஜகவின் ஐடி பிரிவு மற்றும் பிரிஜ் பூஷணின் கன்னத்தில் விழுந்த அறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

அமெரிக்கா அல்லது பின்லாந்து செல்ல ஹசீனா திட்டம்

image

வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஹசீனா, லண்டனில் தஞ்சமடைய விரும்பினார். ஆனால் பிரிட்டன் தஞ்சமளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, இந்தியாவில் அவர் தற்போது தங்கியுள்ளார். வங்கதேசத்தில் அமையும் புதிய அரசுடன் நட்புறவை பேண இந்தியா விரும்புவதால், எவ்வளவு நாள் அவரால் இங்கு தங்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அமெரிக்கா அல்லது பின்லாந்து செல்வது குறித்து, அவர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

News August 7, 2024

டிரம்ப்பை கொல்ல சதி: பாக்.,கை சேர்ந்தவர் கைது

image

குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப்பை கொல்ல சதி செய்ததாக, பாகிஸ்தானின் ஆசிப் மெர்ச்சண்ட் என்பவரை FBI கைது செய்துள்ளது. டிரம்ப் அதிபராக இருந்தபோது, 2020இல் ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் சுலைமானியை கொல்ல உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களை கொலை செய்ய, ஈரான் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், டிரம்ப்பை கொல்ல திட்டமிட்டவர் கைதாகியுள்ளார்.

News August 7, 2024

வினேஷ் போகத்தின் கடந்த கால வலி

image

இந்திய மல்யுத்தக்கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வினேஷ் போகத், கடந்தாண்டு டெல்லியில் போராடினார். அவருடன் சேர்ந்து போராடிய வீரர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதுடன், பணத்திற்காக போராடுவதாக கொச்சைப்படுத்தப்பட்டனர். அந்த வினேஷ் போகத் தான், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்து, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

News August 7, 2024

தங்கம் விலை ₹560 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே செல்வதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹50,640க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹6,330க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் சுங்கவரி குறைப்பால், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை காணப்படுகிறது. கடந்த 3 நாளில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது.

News August 7, 2024

உங்கள் வெற்றி டெல்லி வரை கேட்கிறது: ராகுல்

image

பாரிஸில் வினேஷ் போகத் வெற்றியின் எதிரொலி, டெல்லி வரை கேட்டதாக ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளார். ஒரே நாளில் உலகின் டாப் மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் வீழ்த்தியதாகவும், நமது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டங்களை விமர்சித்தவர்கள், ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இந்த வீர மகளுக்கு முன் வீழ்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். களத்திலிருந்து பதிலளிப்பதுதான் சாம்பியன்களின் அடையாளம் எனவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

News August 7, 2024

அன்பை மட்டுமே விதைத்தவர்: உதயநிதி

image

மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலர் இருக்கும் நிலையில், அன்பை மட்டுமே விதைத்து தமிழக அரசியலைப் பிழைக்க வைத்தவர் கருணாநிதி என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல், வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்த அவரின் வழியில் பயணித்து, மீண்டும் அரசை அமைக்க உறுதியேற்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.

error: Content is protected !!