news

News August 31, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 31, 2024

Worst-ப்பா.. இப்படியெல்லாமா ரூல்ஸ் இருக்குது..!

image

அமெரிக்காவில் கலிஃபோர்னியா, டென்னசியில் ஓடும் காரில் இருந்து விலங்குகளை சுடக்கூடாது. ஜப்பானில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் காரில் உட்கார்ந்தால் தண்டனை வழங்கப்படும். அமெரிக்காவின் அலாஸ்காவில் நாயை வாகனத்தின் கூரையில் வைப்பது சட்டவிரோதம். சைப்ரஸில் காரில் சாப்பிட்டால் 85 யூரோக்கள் அபராதம். ரஷ்யாவில் கார் அழுக்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 2,000 ரூபிள் அபராதம் விதிக்கபடும்.

News August 30, 2024

புதிய நிர்வாகிகளை அறிவித்த காங்கிரஸ்

image

தமிழக காங்கிரஸ் செயலாளராக சூரஜ் ஹெக்டே நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். 25க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு புதிய செயலாளர்களும், பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளையும் நியமித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய பொறுப்பாளர்கள் அந்தெந்த மாநில நிர்வாகிகளுடன் இணைந்து கட்சி பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News August 30, 2024

இதை ஆங்கிலத்தில் சொல்லுங்க பார்ப்போம்..!

image

ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும் எளிதானது தான். ஆனால் அதனை நாம் Practice செய்து கொண்டே இருக்க வேண்டும். தினமும் ஒவ்வொரு புதிய வார்த்தை அல்லது வாக்கியத்தை படித்து, அதனை நண்பர்களுடன் பேசி வந்தாலே ஆங்கிலம் பேசுவது சுலபமாகிவிடும். சரி, விஷயத்துக்கு வருவோம். “நான் நன்றாக படித்திருக்க வேண்டும்” என்பதை ஆங்கிலத்தில் கூறுங்கள் பார்ப்போம். I Should have studied well எனக் கூற வேண்டும்.

News August 30, 2024

ராசி பலன்கள் (31.08.2024)

image

*மேஷம் – சிறப்பான நாளாக அமையும் *ரிஷபம் – மகிழ்ச்சி உண்டாகும் *மிதுனம் – பொறுமையுடன் இருக்க வேண்டும் *கடகம் – சாதனை படைப்பீர் *சிம்மம் – நன்மை உண்டாகும் *கன்னி – பண வரவு இருக்கும் *துலாம் – வீண் செலவு ஏற்படும் *விருச்சிகம் – முயற்சி திருவினையாக்கும் *தனுசு – ஓய்வு தேவை *மகரம் – சிந்தித்து செயல்பட வேண்டும் *கும்பம் – அமைதி உண்டாகும் *மீனம் – புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

News August 30, 2024

உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல்

image

உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான காலம் இன்றுடன் முடிவதால் மனு தாக்கல் செய்யப்பட்டதாக அக்கட்சி எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார். முன்னதாக, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்ற SC அறிவுறுத்தியதற்கு விசிக எதிர்ப்பு தெரிவித்தது.

News August 30, 2024

F4 ரேஸ்: உதயநிதி நேரில் ஆய்வு

image

சென்னையில் நாளை, நாளை மறுநாள் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார். போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands வசதிகளையும் பார்வையிட்டார். மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.

News August 30, 2024

இந்த 4 மாவட்டங்களில் புற்றுநோய் அதிகம்

image

ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோயில் (குமரி), ராணிப்பேட்டையில் அதிக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் மா.சு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். புற்றுநோயை ஆரம்பித்திலேயே கண்டறிவதால் உயிரிழப்பைத் தடுக்க முடியும். இதனால், தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் கண்டறியும் சோதனை விரைவில் நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

News August 30, 2024

முதலீட்டாளர்களுக்கு ‘தடம்’ பெட்டகத்தை வழங்கிய முதல்வர்

image

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு சார்பில் ‘தடம்’ பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் பரிசாக வழங்கினார். கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை முதலீட்டாளர்களுக்கு பரிசாக அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தடம் பெட்டகத்தில் கும்பகோணம் விளக்கு, நெல்லை வாழை நார் கூடை, பனை பொருட்கள் இடம் பெற்றிருக்கிறது.

News August 30, 2024

காலையில் இந்த இரண்டை மட்டும் செய்து பாருங்க..!

image

ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அன்றைய காலை வேளையே தீர்மானிக்கிறது. காலை வேளையை சூப்பராக மாற்ற இதோ சில டிப்ஸ்கள்: எழுந்ததும் முதல் வேலையாக படுக்கைகளை மடித்து வையுங்கள்; இது சோம்பலை போக்கும். பின்னர் பல் துலக்காமல் ஒரு லிட்டர் தண்ணீரை குடியுங்கள். இதனால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று மந்தத்தன்மையை எடுக்கும். பிறகு உங்கள் ரெகுலரான வேலையை ஆரம்பித்துவிடுங்கள்.

error: Content is protected !!